சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு; ஒருவர் காயம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
மதுரை:மதுரையில் பா.ம.க., நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை, சிந்தாமணி ரோடு ராஜம்மாள் நகரில் வசிப்பவர் மாரிசெல்வம்; பா.ம.க., இளைஞரணி மாநில செயலர். இவர் நேற்று காலை, உடல் வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், காலை 9:00 மணிக்கு பைக்கில் முக கவசம் அணிந்து இருவர் வந்தனர். அப்போது மாரிசெல்வத்தை பார்க்க வந்த சேகர் என்பவரிடம்
 பா.ம.க., நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு; ஒருவர் காயம்

மதுரை:மதுரையில் பா.ம.க., நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை, சிந்தாமணி ரோடு ராஜம்மாள் நகரில் வசிப்பவர் மாரிசெல்வம்; பா.ம.க., இளைஞரணி மாநில செயலர். இவர் நேற்று காலை, உடல் வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், காலை 9:00 மணிக்கு பைக்கில் முக கவசம் அணிந்து இருவர் வந்தனர். அப்போது மாரிசெல்வத்தை பார்க்க வந்த சேகர் என்பவரிடம் 'மாரிசெல்வம் எங்கே' என கேட்க, அவர் வீட்டிற்குள் சென்று பார்த்து வருவதாக கூறி உள்ளே சென்றார். அப்போது, வீட்டு சுவரில் ஒரு நாட்டு வெடிகுண்டை இருவரும் வீசினர்.
சத்தம் கேட்டு சேகர் வெளியே வந்தபோது, மற்றொரு குண்டை சுவர் மீது வீசியதில் அதன் சிதறல் பட்டு, சேகர் காயமுற்றார். கீரைத்துரை போலீசார் விசாரிக்கின்றனர்.


பின்னணி என்ன?

மாரிசெல்வம் கூறியதாவது:என் அரசியல் வளர்ச்சி பிடிக்காமல் 'டுபாக்கூர்' பத்திரிகை ஒன்றின் ஆசிரியரும், நிருபரும் என் மீது பொய் புகார் அளித்தனர். 'ஸ்பா' மையத்தில் விபசாரம் நடந்ததாகவும், அதில் எனக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.எனக்கும், 'ஸ்பாவுக்கும்' எந்த சம்பந்தமுமில்லை. அவர்களது பத்திரிகை 'டுபாக்கூர்' என நானும் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க கூறினேன். மூன்று நாட்களாக எனக்கு மறைமுகமாக கொலை மிரட்டல் வந்தது.

கீரைத்துரை இன்ஸ்பெக்டர் பெத்துராஜிடம் தகவல் தெரிவித்தேன். அவரும் விசாரணை நடத்திய நிலையில், நேற்று குண்டு வீசி சென்றுள்ளனர். 'டுபாக்கூர்' ஆசிரியர், நிருபர் மீது சந்தேகம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X