கிராம கோவில்களில் அடுத்தடுத்து திருட்டு

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: மங்கலத்தில் அடுத்தடுத்த கிராமத்தில், இரண்டு கோவில்களில் பணம், பித்தளை கிரீடம், உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.திருப்பூரை அடுத்த மங்கலம், இச்சிபட்டியில் எட்டுக்கை செங்காளியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 13 ம்தேதி வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூசாரி பூட்டி சென்றார். மறுநாள் காலையில் சென்ற போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே



திருப்பூர்: மங்கலத்தில் அடுத்தடுத்த கிராமத்தில், இரண்டு கோவில்களில் பணம், பித்தளை கிரீடம், உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.திருப்பூரை அடுத்த மங்கலம், இச்சிபட்டியில் எட்டுக்கை செங்காளியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 13 ம்தேதி வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூசாரி பூட்டி சென்றார். மறுநாள் காலையில் சென்ற போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்த்த போது, உண்டியலில் இருந்த பணம் மற்றும் பித்தளை கீரிடம் ஆகியவை திருட்டு போனது. மங்கலம் போலீசார் விசாரித்து வந்தனர்.மற்றொரு கோவிவிலில்...இதேபோல், பள்ளிபாளையம் கிராமத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை, பூஜை செய்ய பூஜாரி சென்றார். கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்த்த போது, மர்ம நபர்கள் உண்டியலை பெயர்த்து எடுத்து சென்றது தெரிந் தது. உண்டியலில், 10 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.அடுத்தடுத்த நாளில், அடுத்தடுத்த கிராமத்தில் உள்ள கோவில்களை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு கோவில் திருட்டு தொடர்பாக மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X