வான்முகில் வழாது பெய்யட்டும்!

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: பள்ளி மாணவ, மாணவியரிடம் பசுமை ஆர்வத்தை துாண்டும் வகையில், டி.கே.டி., பள்ளி வளாகத்தில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.மழை பெய்து வளம் சுரக்க வேண்டும் என்பதே, அனைவரின் வேண்டுதலாகவும் இருக்கிறது. அப்படி, மழை பெய்ய வேண்டுமெனில், மரம் வளர்க்க வேண்டும் என்பது கடமையாக மாறியுள்ளது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், விவசாயிகளுக்கு மரம், துாய்மையான

திருப்பூர்: பள்ளி மாணவ, மாணவியரிடம் பசுமை ஆர்வத்தை துாண்டும் வகையில், டி.கே.டி., பள்ளி வளாகத்தில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.மழை பெய்து வளம் சுரக்க வேண்டும் என்பதே, அனைவரின் வேண்டுதலாகவும் இருக்கிறது. அப்படி, மழை பெய்ய வேண்டுமெனில், மரம் வளர்க்க வேண்டும் என்பது கடமையாக மாறியுள்ளது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், விவசாயிகளுக்கு மரம், துாய்மையான காற்றும், மழையும் மக்களுக்கு... என்கிற லட்சியத்துடன் மரக்கன்றுகள் நட்டனர். அதன்பின், குறுங்காடுகளாக மரம் வளர்ந்த பகுதியெல்லாம், பல்லுயிர் சுழற்சிக்கான பசுமை மண்டலமாக மாறியது தெரியவந்தது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டங்களில் நடப்பட்ட, 12 லட்சம் மரக்கன்றுகளும், மரமாகவே வளர்ந்துவிட்டன. ஏழாவது திட்டத்தில் இதுவரை, 1.60 லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளது. டிச., மாத இறுதிக்குள், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், திருப்பூர், பெருந்தொழுவு - அமராவதிபாளையம், டி.கே.டி., குளோபல் பப்ளிக் பள்ளி வளாகத்தில், நேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. 'திருப்பூர் ரவுண்ட் டேபிள் மற்றும் திருப்பூர் லேடீஸ் சர்க்கிள்' நிர்வாகிகள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். அதன் தலைவர் தினேஷ்குமார், கவிதா தினேஷ் உள்ளிட்டோர் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.இதில், தேக்கு -115, புங்கன் -15, புன்னை -5, பலாசு -10 என, 145 மரக்கன்றுகள் நடப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.---'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், டி.கே.டி., குளோபல் பப்ளிக் பள்ளி வளாகத்தில், நேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. 'திருப்பூர் ரவுண்ட் டேபிள் மற்றும் திருப்பூர் லேடீஸ் சர்க்கிள்' நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X