சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'அப்சர்வர்' பயணித்த கார் வாடகை நிலுவை: கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: தேர்தல் பார்வையாளருக்காக இயக்கிய சொகுசு கார்களுக்கான வாடகையை வழங்க கோரி, உரிமையாளர்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் பார்வையாளர் பயன்பாட்டுக்காக, சொகுசு கார்கள் வாடகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன. பிரசார காலத்தில் துவங்கி, தேர்தல் ஓட்டுப்பதிவு நாள் வரை, வாடகை கார்கள்


திருப்பூர்: தேர்தல் பார்வையாளருக்காக இயக்கிய சொகுசு கார்களுக்கான வாடகையை வழங்க கோரி, உரிமையாளர்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் பார்வையாளர் பயன்பாட்டுக்காக, சொகுசு கார்கள் வாடகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன. பிரசார காலத்தில் துவங்கி, தேர்தல் ஓட்டுப்பதிவு நாள் வரை, வாடகை கார்கள் இயக்கப்பட்டன.தேர்தல் பணியாற்றிய அதிகாரிகள், அலுவலருக்கான மதிப்பூதியம்; பறக்கும் படை, கண்காணிப்பு படையினருக்கு ஊக்கத்தொகை; கார் வாடகை என, பல்வேறு செலவுகளுக்கு, கட்டணம் கொடுக்கப்படாமல் இருக்கிறது.பொறுமை இழந்த வருவாய்த்துறையினர், தேர்தல் நிதியைஒதுக்கக்கோரி, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சொகுசு கார்களுக்கான வாடகையை வழங்க வேண்டுமென கேட்டு, கார் உரிமையாளர்கள் நேற்று, கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்க வந்தவர்கள், திடீரென, 'போர்டிகோ'வில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்ததும், 25 நாட்களில் பணம் கிடைக்கு மென கூறி, ஒப்பந்தம் செய்தனர். இதுவரை வாடகை பணம் கிடைக்காததால், குடும்பங்கள் வறுமையில் வாடுவதாக குற்றம்சாட்டினர்.பல மணி நேர போராட்டத்துக்கு பின், மாவட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் வாடகை நிலுவை வழங்கப்படுமென உறுதி அளித்தனர். இதனால், போராட்டம் கைவிடப்பட்டது.ஒரு கோடி ரூபாய் நிலுவை


தேர்தல் செலவுக்கான பெரும்பாலான தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. குறிப்பாக, சொகுசு கார் மற்றும் தேர்தல் பணிக்கு பயன்படுத்திய, வாடகை கார்களுக்கு அதிக நிலுவை உள்ளது. மாவட்டத்தில் மட்டும், ஒருகோடி ரூபாய் வரை, கார் வாடகை வழங்கப்பட வேண்டியுள்ளது. விரைவில் வழங்கப்படும் என, வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X