இயற்கை விவசாய தொழில்நுட்பம் அறப்பொருள் வேளாணகத்தில் பயிற்சி| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

இயற்கை விவசாய தொழில்நுட்பம் அறப்பொருள் வேளாணகத்தில் பயிற்சி

Added : நவ 16, 2021
Share
திருப்பூர்: திருச்சியில் உள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலைய அதிகாரிகள், திருப்பூர் அறப்பொருள் வேளாணகத்தில், இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளித்தனர்.திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு, 'இயற்கை விவசாயத்தில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பம்' என்ற தலைப்பில், 'வெற்றி' அமைப்பின், அறப்பொருள் வேளாணகத்தில் நேற்று, பயிற்சி முகாம் நடந்தது. உதவி பேராசிரியர் செல்வம்

திருப்பூர்: திருச்சியில் உள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலைய அதிகாரிகள், திருப்பூர் அறப்பொருள் வேளாணகத்தில், இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளித்தனர்.திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு, 'இயற்கை விவசாயத்தில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பம்' என்ற தலைப்பில், 'வெற்றி' அமைப்பின், அறப்பொருள் வேளாணகத்தில் நேற்று, பயிற்சி முகாம் நடந்தது. உதவி பேராசிரியர் செல்வம் வரவேற்றார். இணை இயக்குனர் முகைதீன், இணை ஆராய்ச்சியாளர் கண்ணன், இணை பேராசிரியர் பாண்டியன், பேராசிரியர் இளங்கோவன் ஆகியோர், சிறப்பு பயிற்சி அளித்தனர்.இயற்கை விவசாயத்தில் பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில், வேளாண் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் (பூச்சியியல்) கார்த்திகேயன் மற்றும் 'இயற்கை விவசாயத்தில் நுாற்புழு மேலாண்மை' என்ற தலைப்பில், நுாற்புழுவியல் உதவி பேராசிரியர் பிரபு ஆகியோர் பேசினர்.இயற்கை மூலிகை பூச்சி விரட்டி தயாரிப்பு மற்றும் உபயோகம் குறித்து, முசிறியில் செயல்படும் அகத்தியர் உழவர் உற்பத்தி நிறுவன மேலாண்மை இயக்குனர் யோகநாதன் பயிற்சி அளித்தார். விவசாயிகளின் சந்தேகளுக்கு, பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள், 30 பேருக்கு, பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X