சுற்றுலாத்துறை போட்டி மாணவ, மாணவியருக்கு பரிசு

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், 'ஆன்லைன்' மூலம் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேற்று பரிசு வழங்கப்பட்டது.உலக சுற்றுலா தினத்தையொட்டி, 'ஆன்லைன்' மூலம், ஓவியம் மற்றும் வீடியோ போட்டி நடத்தப்பட்டது.போட்டிகளில் பங்கேற்று, சிறப்பான படைப்புகளை சமர்ப்பித்தவர்கள், வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டனர். பங்கேற்ற, 200 பள்ளி மாணவ, மாணவியரில்,

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், 'ஆன்லைன்' மூலம் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேற்று பரிசு வழங்கப்பட்டது.உலக சுற்றுலா தினத்தையொட்டி, 'ஆன்லைன்' மூலம், ஓவியம் மற்றும் வீடியோ போட்டி நடத்தப்பட்டது.போட்டிகளில் பங்கேற்று, சிறப்பான படைப்புகளை சமர்ப்பித்தவர்கள், வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டனர். பங்கேற்ற, 200 பள்ளி மாணவ, மாணவியரில், சிறப்பான படைப்புகளை சமர்ப்பித்த, மூன்று பேர் தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.திருப்பூர் சுற்றுலாத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், வெற்றி பெற்றவர்களுக்கு, 'மொபைல்' போன், 'வெட் கிரைண்டர்' மற்றும் ரொக்க பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ், உதவி சுற்றுலா அலுவலர் செல்வராஜ், ஸ்ரீமகாசக்தி அறக்கட்டளை நிறுவன தலைவர் பூபதி ஆகியோர், பரிசு வழங்கி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X