துளிகள் செய்தி

தமிழ்நாடு

பட்டா நிலத்தில் அளவீடு பயனாளிகள் நிம்மதி

Added : நவ 16, 2021
Share
Advertisement
பல்லடம்: பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி, ஓம்சக்தி நகர் பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. கடந்த, 2020ல், 196 'சைட்'டுகள் பிரிக்கப்பட்டு, பட்டா வழங்க பயனாளிகள் தேர்வு நடந்தது.அதன்படி, 154 குடும்பங்களுக்கு பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 72 பேருக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என,

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி, ஓம்சக்தி நகர் பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. கடந்த, 2020ல், 196 'சைட்'டுகள் பிரிக்கப்பட்டு, பட்டா வழங்க பயனாளிகள் தேர்வு நடந்தது.அதன்படி, 154 குடும்பங்களுக்கு பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், 72 பேருக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என, பயணிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இதற்காக, நேற்று முன்தினம், தாசில்தார் தேவராஜ் முன்னிலையில் வருவாய்த் துறையினர் அளவீடு செய்யும் பணி மேற்கொண்டனர். தாசில்தார் கூறுகையில், 'மொத்தமுள்ள, 154 மனைகளில், 72 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 36 பேருக்கு பட்டா வழங்கப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X