சம்பவம் செய்தி

தமிழ்நாடு

படிப்பில் தடுமாற்றம் தெரியவில்லை!தற்கொலை மாணவிக்கு நற்சான்றிதழ்

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை:'படிப்பில் எவ்வித தடுமாற்றமும் தெரியாததால், தற்கொலை செய்த மாணவிக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கும் என்பதை யூகிக்கவில்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இரண்டு பள்ளி ஆசிரியர்களும் பதில் அளித்துள்ளனர்.தனியார் பள்ளிகோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, 12ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார்

கோவை:'படிப்பில் எவ்வித தடுமாற்றமும் தெரியாததால், தற்கொலை செய்த மாணவிக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கும் என்பதை யூகிக்கவில்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இரண்டு பள்ளி ஆசிரியர்களும் பதில் அளித்துள்ளனர்.

தனியார் பள்ளிகோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, 12ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்த போது, அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, 35, பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து, அவரை 'போக்சோ' பிரிவில் போலீசார் கைது செய்து, உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.மாணவியின் புகாரை கண்டுகொள்ளாத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், 46, என்பவரும் கைது செய்யப்பட்டார்.இந்த விவகாரத்தில், பள்ளிக்கல்வி துறை சார்பில் சிறப்பு குழு விசாரணை செய்து, அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. மாவட்ட கல்வி அதிகாரி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழு விசாரணையை முடித்துள்ளது.
மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவியின் விபரம், கற்றல் முறை, பள்ளியின் நிறை, குறைகள், இயற்பியல் ஆசிரியரின் செயல்பாடுகள், பள்ளி முதல்வரின் செயல்பாடுகள் உட்பட பல்வேறு கருத்துகள் மையப்படுத்தப்பட்டன.பின், இது குறித்த கேள்வித்தாள் வடிவமைத்து, ஆசிரியர்களுக்கு ஒரே சமயத்தில் வழங்கி, பதிலை எழுத்து பூர்வமாக பெற்றுள்ளனர்.


யூகிக்க முடியவில்லை

மாணவி இறுதியாக படித்த பள்ளியிலும், இதேபோன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், 'மாணவியின் மனநிலை, பிரச்னை குறித்து முன்கூட்டியே ஆசிரியர்களாகிய நீங்கள் யூகிக்க முடியவில்லையா' என்ற கேள்விக்கு, 'மாணவி படிப்பில் மிகவும் கெட்டி. படிப்பில் எவ்வித தடுமாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், இதுபோன்ற சிக்கலில் இருப்பார் என்பதை யூகிக்க முடியவில்லை' என, ஆசிரியர்கள் பதில் அளித்துள்ளனர்.
புதிய பள்ளியில், 'பிளஸ் 2 தேர்வில் டாப்பராக இந்த மாணவியே வருவார் என்று நினைத்தோம்; இது குறித்து மாணவியின் செயல்பாடுகளில் ஒன்றும் புலப்படவில்லை' என தெரிவித்துள்ளனர்.விசாரணை குறித்து, முதன்மை கல்வி அதிகாரி கீதாவிடம் கேட்டபோது, ''முதல்கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக குழு அமைத்து, கூடுதல் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தயார் செய்து வருகிறோம்.


''ஆசிரியர்கள், அலுவலர்களிடம் நேரடியாகவும், மாணவர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க உள்ளோம்,'' என்றார்.


ஜாமின் மனு

இந்நிலையில் பள்ளி முதல்வரை ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 'கஸ்டடி' எடுத்து விசாரிக்கவும் மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


சைபர் கிரைம் விசாரணை

தற்கொலை செய்த மாணவி மற்றும் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி இடையே நடந்த 'வாட்ஸ் ஆப் சாட்' என, ஒரு பதிவு வெளியாகி பரவி வருகிறது. இதன் உண்மை தன்மை குறித்தும், மாணவியின் மொபைல் போன் அழைப்பு விபரங்கள், மாணவியின் மொபைலில் இருந்து ஏதேனும் தகவல்கள் அழிக்கப்பட்டதா?
தற்கொலை செய்த தினத்தில் மாணவியின் மொபைல் போனுக்கு சென்ற அழைப்பு, எஸ்.எம்.எஸ்., விபரங்கள் போன்ற தகவல்களை திரட்டி, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.மேலும், மாணவி - ஆசிரியரின் உரையாடல் என, ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது. இந்த தகவல்களை சமூக வலைதளங்களில் போலீசாருக்கு தெரியாமல் பரப்பும் நபர்கள் யார், இதன் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி, அதில் குறிப்பிட்ட தகவல்கள் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் வீட்டில் இருந்து, நேற்று நோட்டு, புத்தகங்களை கைப்பற்றி விசாரணைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X