பரிசோதனை மையத்தில் தெரு நாய்கள் நடமாட்டம்| Dinamalar

பரிசோதனை மையத்தில் தெரு நாய்கள் நடமாட்டம்

Added : நவ 16, 2021
Share
பல்லடம்: பல்லடத்தில், நோய் தொற்று பரிசோதனை மையத்தில் 'முகாமிட்டுள்ள' தெரு நாய்களால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.பல்லடம் அரசு கல்லுாரியின் பழைய வகுப்பறை கட்டடங்கள், கொரோனா பெருந்தொற்று பரிசோதனை மையமாக செயல்பட்டு வருகிறது. தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், நோய் தொற்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வளாகத்தில், நாய்கள் நடமாட்டம்

பல்லடம்: பல்லடத்தில், நோய் தொற்று பரிசோதனை மையத்தில் 'முகாமிட்டுள்ள' தெரு நாய்களால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.பல்லடம் அரசு கல்லுாரியின் பழைய வகுப்பறை கட்டடங்கள், கொரோனா பெருந்தொற்று பரிசோதனை மையமாக செயல்பட்டு வருகிறது. தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், நோய் தொற்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வளாகத்தில், நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது:பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட வீதிகளில், எண்ணற்ற தெரு நாய்கள் கேட்பாரற்று திரிகின்றன. அவ்வாறு, சுற்றி திரியும் நாய்கள் பல, சமீப நாட்களாக, தொற்று பரிசோதனை மையத்தில் முகாம் இட்டுள்ளன. இதனால், பரிசோதனைக்கு வரும் பெண்கள், முதியோர் அச்சப்படுகின்றனர். எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X