பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலையில் பஞ்சமூர்த்திகள் வலம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மஹாரத தேரோட்டம் நடந்தது. தேர் போல அலங்கரித்த வாகனத்தில், பஞ்சமூர்த்திகள் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா, 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. வரும் 19ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.
 தி.மலையில் பஞ்சமூர்த்திகள் வலம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மஹாரத தேரோட்டம் நடந்தது. தேர் போல அலங்கரித்த வாகனத்தில், பஞ்சமூர்த்திகள் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா, 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. வரும் 19ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. வழக்கமாக, ஏழாம் நாள் விழாவில், பஞ்சமூர்த்திகளான, விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தேரோட்டம் நடக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாட்டால், மாடவீதியில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் ரத்தானது. இந்நிலையில், நேற்று தேர் போல அலங்கரித்த வாகனத்தில், பஞ்சமூர்த்திகள் ஐந்தாம் பிரகாரத்தில், டிராக்டர் மூலம் இழுத்து செல்லப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது.


கரும்பு தொட்டில்

திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவுக்கு குழந்தைப் பேறு இல்லாமல், அருணாசலேஸ்வரரை மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்தபோது, அவருக்கு அருணாசலேஸ்வரரே குழந்தையாக பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதனால், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர், அருணாசலேஸ்வரரை மனமுருகி வேண்டினால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதன்படி, அருணாசலேஸ்வரரை வேண்டி, குழந்தை வரம் பெற்றவர்கள், நேர்த்திக்கடனாக நேற்று, தங்கள் குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்து, மாட வீதியில் வலம் வந்து வழிபட்டனர்.

கரும்பு தொட்டிலில் நேர்த்திக்கடன்திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவுக்கு குழந்தைப் பேறு இல்லாமல், அருணாசலேஸ்வரரை மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்தபோது, அவருக்கு அருணாசலேஸ்வரரே குழந்தையாக பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இதனால், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர், அருணாசலேஸ்வரரை மனமுருகி வேண்டினால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன்படி, அருணாசலேஸ்வரரை வேண்டி, குழந்தை வரம் பெற்றவர்கள், நேர்த்திக்கடனாக நேற்று, தங்கள் குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்து, மாட வீதியில் வலம் வந்து வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X