ஆம்பூர்:பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் மயங்கி விழுந்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே சோமலாபுரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, 120 குழந்தைகள் படிக்கின்றனர். நேற்று மதியம் 12:00 மணிக்கு குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. பிற்பகல் 3:30 மணிக்கு, 13 குழந்தைகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.உடனடியாக, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனால், பயந்து போன மற்ற குழந்தைகளை, அவர்களின் பெற்றோர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விட்டனர்.ஆம்பூர் சுகாதாரத் துறையினர், அந்த குழந்தைகள் வீடுகளுக்கு சென்று முதலுதவி அளித்தனர்.அங்கன்வாடி மைய ஆசிரியர் அஞ்சலி, சமையலர் மல்லிகா ஆகியோரிடம், மாவட்ட அங்கன்வாடி திட்ட இயக்குனர் கோமதி நடத்திய விசாரணையில், மதிய உணவில் பல்லி விழுந்து இறந்து கிடந்தது தெரிந்தது. தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE