சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு ஆலை விபத்து இடிபாடுகளில் சிக்கிய இரு பெண் உடல்கள் மீட்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
சிவகாசி:சிவகாசியில் பட்டாசு கம்பெனியில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டடம் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் சிக்கிய இரு பெண் உடல்கள் மீட்கப்பட்டன.விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி காலனியில் மதுரை, கோரிப்பாளையத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் பட்டாசு பேப்பர் குழாய் தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் இங்கு நடந்த வெடி விபத்தில்,
 பட்டாசு ஆலை விபத்து இடிபாடுகளில் சிக்கிய இரு பெண் உடல்கள் மீட்பு

சிவகாசி:சிவகாசியில் பட்டாசு கம்பெனியில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டடம் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் சிக்கிய இரு பெண் உடல்கள் மீட்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி காலனியில் மதுரை, கோரிப்பாளையத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் பட்டாசு பேப்பர் குழாய் தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் இங்கு நடந்த வெடி விபத்தில், இருவர் காயத்துடன் தப்பினர். அங்கிருந்த இரண்டு மாடி கட்டடம் தரைமட்டமானதால் அங்கு பணியில் இருந்த ஹமீதா, 55; கார்த்தீஸ்வரி, 33 ஆகிய இரு பெண்கள் கட்டடத்திற்குள் சிக்கி இருப்பதாக காயம் அடைந்தவர்கள் தெரிவித்தனர்.

ஜே.சி.பி., இயந்திரங்கள் வாயிலாக, நேற்று முன்தினம் இரவு 9:30 மணி வரை மீட்பு பணி நடந்தது. நேற்று காலை 8:00 மணி முதல் மீண்டும் மீட்பு பணி துவங்கியது. 25 மணி நேர தேடலுக்கு பின், நேற்று மாலை 4:45 மணிக்கு இடிபாடுகளில் சிக்கிய இரு பெண்களின் உடலும் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டன.'கட்டட உரிமையாளர்ராமநாதன், அவரது மனைவி பஞ்சவர்ணம் குறித்த தகவல் இல்லை. அவர்கள் தலைமறைவாகி இருக்கலாம்' என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X