தர்மபுரி:ஜீப் கிணற்றில் பாய்ந்ததில், தந்தை, மகள் பலியாகினர். தாய் உயிருடன் மீட்கப்பட்டார்.
சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்தவர் வீரன், 40; பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமா, 35; மகள் சுஷ்மிதா, 13; ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன் மேட்டூர் வந்த வீரன், குடும்பத்தினருடன் பொலீரோ ஜீப்பில், பெங்களூரு புறப்பட்டார்.
மதியம் 2:45 மணிக்கு தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பொன்னேரியில் உள்ள தாபாவில் மதிய உணவு சாப்பிட்டு புறப்பட்டனர். அப்போது, வீரனின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், அருகில் இருந்த 65 அடி ஆழ விவசாய கிணற்றுக்குள் பாய்ந்தது.
அப்போது ஜீப் கதவு திறந்ததால் உமா, கிணற்று நீரில் விழுந்து தத்தளித்தார். அவரை அருகே இருந்த சிலர் மீட்டனர். ஜீப்பில் இருந்த வீரனும், மகள் சுஷ்மிதாவும் காருடன் கிணற்றில் மூழ்கினர். இரவு, 8:45 மணிக்கு இருவரது சடலங்களும் மீட்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE