பொது செய்தி

தமிழ்நாடு

கரையை நெருங்கும் காற்றழுத்தம் : சென்னைக்கு மீண்டும் 'ரெட் அலர்ட்'

Updated : நவ 17, 2021 | Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை :வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம், ஆந்திரா கடற்பகுதியை நாளை நெருங்குவதால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதி கன மழை பெய்வதற்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல்
கரை,ம் காற்றழுத்தம்  சென்னை,ரெட் அலர்ட்

சென்னை :வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம், ஆந்திரா கடற்பகுதியை நாளை நெருங்குவதால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதி கன மழை பெய்வதற்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:
தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திராவின் தெற்கு பகுதி மற்றும் தமிழக வடக்கு கடலோர மாவட்டங்களை நெருங்கும். தற்போதைய நிலையில், மேலும் வலுவடையாமல், காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே தமிழக பகுதியை நெருங்கும். அதனால், சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும், வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும் இடையில், மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக, பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


அதி கன மழை



சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று, 20 செ.மீ., வரையிலும் மிக கன மழை பெய்வதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், 12 செ.மீ., வரையில் கன மழை பெய்யும்.நாளை பல மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், 20 செ.மீ.,க்கும் அதிகமாக அதி கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இந்த மாவட்டங்களுக்கு, 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், மிக கன மழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுதவிர ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலுார் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
தமிழகத்தை பொறுத்தவரை, டிசம்பர் வரையிலும் பருவ காலம் உள்ளதால், அதுவரை மழை தொடர வாய்ப்புள்ளது. ஆனால், எந்த அளவுக்கு மழை இருக்கும் என்பதை தற்போதே கணிக்க முடியாது. வானிலை சூழலை கண்காணித்து, அவ்வப்போது தெரிவிக்கப்படும்.


மீனவர்களுக்கு தடை



மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக வடக்கு கடலோர பகுதிகளில், நாளை வரையிலும் மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, தஞ்சை மாவட்டம் மதுக்கூர் மற்றும் செட்டிகுளத்தில், 10 செ.மீ., மழை பெய்துஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X