சென்னையில் கேலோ இந்தியா போட்டிக்கான மாநில அணி தேர்வு : விரும்புவோர் பங்கேற்கலாம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: 'கேலோ இந்தியா' போட்டிக்கான தமிழக, ஹாக்கி மற்றும் வாலிபால் அணி தேர்வு சென்னையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள், நேரடியாக கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டு போட்டி 2021, 18 வயதுக்குட்பட்ட பெண்கள் ஹாக்கி அணி தேர்வு வரும் 20ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில்



கோவை: 'கேலோ இந்தியா' போட்டிக்கான தமிழக, ஹாக்கி மற்றும் வாலிபால் அணி தேர்வு சென்னையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள், நேரடியாக கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டு போட்டி 2021, 18 வயதுக்குட்பட்ட பெண்கள் ஹாக்கி அணி தேர்வு வரும் 20ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.ஆண்கள் வாலிபால் அணிக்கான தேர்வு வரும் 25ம் தேதியும், பெண்களுக்கான தேர்வு வரும் 26ம் தேதியும், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்து, 'கேலோ இந்தியா' போட்டிக்கு அனுப்பப்படுவர்.தற்போது கொரோனா மற்றும் சமீபத்தில் ஏற்பட்ட மழை காரணமாக, பல விளையாட்டுகளுக்கு மாவட்டத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை.இதனால் மாநில அணிக்கான தேர்வில் பங்கு பெற விரும்பும் வீரர்கள், தாங்களாகவே நேரடியாக தேர்வு நடைபெறும் மைதானத்திற்கு சென்று, தேர்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வில் கலந்து கொள்ள செல்லும் மாணவர்களுக்கு பயணப்படி, தினப்படி எதும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் பிறப்பு சான்றிதழ், படிப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X