சென்னைக்கு தூய்மை பணியாளர்கள் பயணம்: குப்பையால் மேட்டுப்பாளையம் வீதிகளில் நாற்றம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: நகராட்சியில் பல இடங்களில், குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடும், கொசுத் தொல்லையால், டெங்கு காய்ச்சலும் பரவும் நிலை உள்ளது.மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இங்கு, 87 நகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளர்களும், 151 தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களும் உள்ளனர்.நான்கு சுகாதார ஆய்வாளர்கள் இருந்தனர். இதில் இருவர்


மேட்டுப்பாளையம்: நகராட்சியில் பல இடங்களில், குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடும், கொசுத் தொல்லையால், டெங்கு காய்ச்சலும் பரவும் நிலை உள்ளது.மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன.
இங்கு, 87 நகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளர்களும், 151 தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களும் உள்ளனர்.நான்கு சுகாதார ஆய்வாளர்கள் இருந்தனர். இதில் இருவர் வெளியூருக்கு மாற்றப்பட்டனர். தற்போது இருவர் மட்டுமே உள்ளனர். நகரில் குப்பையை சுத்தம் செய்யும் பணி, பெயரளவில் நடைபெறுவதால், நகரில் பல இடங்களில் குப்பை குவிந்து கிடக்கிறது.மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் சாலையில், டாஸ்மாக் பார்களின் குப்பை, ஓட்டலின் கழிவு இலைகள், லாட்ஜ்களின் குப்பை குவிந்து கிடக்கிறது.கழிவுநீர் சாக்கடையில், குப்பை அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், தேங்கி நிற்கிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளிலிருந்தும், சாக்கடையில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் இருந்தும், துர்நாற்றம் வீசுகிறது.நகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது. இதனால் நகரில் கொசு தொல்லையால், டெங்கு காய்ச்சல் பரவுமோ என்ற அச்சம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில், "சென்னைக்கு, 25 தூய்மை பணியாளர்கள் அனுப்பப்பட்டனர். அதனால் நகரில் குப்பையை முற்றிலும் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X