சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருந்தாளுனர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை

Added : நவ 16, 2021
Share
Advertisement
வேடசந்துார்:ஆன்லைன் மூலம் சிறுமிகள் சம்பந்தமான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக வந்த புகாரின் பேரில் வேடசந்துார் மருந்தாளுனர் தங்கராஜா 48, வீட்டில் சி.பி.ஐ., போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.சிறுமிகள் பாலியல் குறித்து வீடியோ பார்த்தது ,பதிவேற்றம் செய்தது தொடர்பாக சி.பி.ஐ., போலீசார் 83 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் 76

வேடசந்துார்:ஆன்லைன் மூலம் சிறுமிகள் சம்பந்தமான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக வந்த புகாரின் பேரில் வேடசந்துார் மருந்தாளுனர் தங்கராஜா 48, வீட்டில் சி.பி.ஐ., போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சிறுமிகள் பாலியல் குறித்து வீடியோ பார்த்தது ,பதிவேற்றம் செய்தது தொடர்பாக சி.பி.ஐ., போலீசார் 83 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் 76 இடங்களில் விசாரணை நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் திருப்பூர், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் ஆகிய 6 இடங்களில் இந்த விசாரணை நடந்துள்ளது.வேடசந்துார் ஆர்.எச்., காலனியை சேர்ந்த இவர், அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக உள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வீட்டுக்கு நேற்று சி.பி.ஐ., போலீசார் 7 பேர் மதியம் 1:00 மணிக்கு வந்தனர். இரவு 8:00 மணி வரை சோதனை, விசாரணை நடத்தினர்.
பிரின்டர், அலைபேசி, மெமரி கார்டுகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர்.
தங்கராஜாவின் மகன் சூரியா டில்லியில் படித்த போது அலைபேசியை தவறவிட்டுள்ளார். அதில் சிறுமிகள் பாலியல் தொடர்பாக வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.அதன் அடிப்படையில் சி.பி.ஐ., விசாரணை நடத்தியுள்ளது, ஓரிரு நாட்களில் விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என தெரிவித்து சென்றுள்ளனர். ஆனால் உள்ளூர் போலீசாருக்கு விசாரணை குறித்து எந்த தகவலும் தரப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X