அக்னிதீர்த்தம் அருகில் கழிவு நீர், குப்பைகள் குவிந்து துர்நாற்றம்; நோய் அச்சத்தில் மக்கள்| Dinamalar

தமிழ்நாடு

அக்னிதீர்த்தம் அருகில் கழிவு நீர், குப்பைகள் குவிந்து துர்நாற்றம்; நோய் அச்சத்தில் மக்கள்

Added : நவ 16, 2021
Share
ராமேஸ்வரம் : தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்தம் அருகில் கழிவு நீர், குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி, சுகாதாரக்கேடாக உள்ளதால் மக்கள் நோய் அச்சத்தில் உள்ளனர்.2014ல் பிரதமர் மோடி துாய்மை இந்தியா திட்டத்தில் தென்னகத்து காசியாககருதுபடும் ராமேஸ்வரத்தில் சுகாதாரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்திட அம்ரூட் சிட்டி திட்டத்தில் ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் : தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்தம் அருகில் கழிவு நீர், குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி, சுகாதாரக்கேடாக உள்ளதால் மக்கள் நோய் அச்சத்தில் உள்ளனர்.

2014ல் பிரதமர் மோடி துாய்மை இந்தியா திட்டத்தில் தென்னகத்து காசியாககருதுபடும் ராமேஸ்வரத்தில் சுகாதாரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்திட அம்ரூட் சிட்டி திட்டத்தில் ராமேஸ்வரம் நகராட்சியை மத்திய அரசு சேர்த்தது. இத்திட்டத்தில் ரூ.8 கோடியை பழைய பூங்கா சீரமைப்பு, புதிய பூங்கா அமைத்தால், தகவல் பலகைகள் அமைத்து மக்களுக்கு பயன்பாடின்றி நிதியை வீணடித்த நகராட்சி அதிகாரிகள், சுகாதாரம் பராமரிக்க நிரந்த தீர்வுக்கு கவனம் செலுத்தவில்லை.

இதனால் ராமேஸ்வரம்கோயில் அக்னி தீர்த்தம் கடற்கரை தெற்கு 50 மீட்டர் துாரத்தில் குப்பை், பாலிதீன் பை, பிளாஸ்டிக் கப்கள் குவிந்தும், தனியார் லாட்ஜில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் நகருக்குள் வரும் சுற்றுலா பயணிகள் மூக்கை பொத்தி கொண்டு வருகின்றனர். நகராட்சியில் 170 துப்புரவு ஊழியர்கள், திடக்கழிவு மேலாண்மை கூடம் இருந்தும், இப்பகுதியில் குப்பையை அகற்றி சுகாதாரம் பராமரிக்க நகராட்சி முன்வரவில்லை.

இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் தொற்று நோய் பரவும் குடோனாக மாறி உள்ளது. இதனால் மக்கள் நோய் அச்சத்தில் உள்ளனர். எனவே அக்னி தீர்த்தம், இதன் சுற்றுபுற பகுதியிலும் சுகாதாரம் பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X