டாக்டர், நர்சுகள் பற்றாக்குறை: தவிக்கிறது அரசு மருத்துவமனை

Added : நவ 16, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள, டாக்டர்கள், நர்சுகள், தூய்மைப் பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை துவங்கி, 137 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு, 140 படுக்கை வசதிகளும், இரண்டு அறுவை சிகிச்சை அரங்கம், நவீன எக்ஸ்ரே பிரிவு, ரத்தப் பரிசோதனை நிலையம் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன.



மேட்டுப்பாளையம்: அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள, டாக்டர்கள், நர்சுகள், தூய்மைப் பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை துவங்கி, 137 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு, 140 படுக்கை வசதிகளும், இரண்டு அறுவை சிகிச்சை அரங்கம், நவீன எக்ஸ்ரே பிரிவு, ரத்தப் பரிசோதனை நிலையம் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன. நாளொன்றுக்கு, 1000லிருந்து, 1,200க்கும் மேற்பட்டோர், சிகிச்சை பெற வருகின்றனர். சராசரியாக, 110 உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாலுகா மருத்துவமனை என்பதால், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், பர்லியாறு, குஞ்சப்பனை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள், இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தின் நுழைவாயிலில், இந்த மருத்துவமனை உள்ளதால், மலைப்பாதையில் ஏற்படும் விபத்தில் காயமடைந்தவர்களை, இந்த மருத்துவமனைக்குதான் கொண்டு வருகின்றனர்.மருத்துவமனையில் இருதயம், நரம்பியல், பொது மருத்துவம், தோல் டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 15க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களும், தூய்மைப் பணியாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. விபத்தில் காயமடைந்து வருபவர்களுக்கு, சிடி ஸ்கேன் வசதி இல்லாததால், கோவைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதனால் அரசு மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் காலியாக உள்ள டாக்டர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 100 படுக்கைகள் கொண்ட பெரிய கட்டடம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X