முதுகுளத்தூரில் பலத்த மழை; தெருக்களில் தேங்கிய தண்ணீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்தூரில் பலத்த மழை; தெருக்களில் தேங்கிய தண்ணீர்

Added : நவ 16, 2021
Share
முதுகுளத்துார் : முதுகுளத்துார் சுற்றியுள்ள அப்பனேந்தல், வெண்ணீர்வாய்க்கால், காக்கூர், துாரி உட்பட பல்வேறு கிராமங்களில் நேற்று மதியம் 2:00 மணிக்கு மேல் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழைபெய்தது.இதனையடுத்து முதுகுளத்துாரில் பெய்த மழையால் கீழரதவீதி, வடக்கூர், நாடார் தெரு, கிழக்கு தெருவில் தண்ணீர் தேங்கியுள்ளது. தெருக்களில் தேங்கிநிற்கும் தண்ணீரால்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் சுற்றியுள்ள அப்பனேந்தல், வெண்ணீர்வாய்க்கால், காக்கூர், துாரி உட்பட பல்வேறு கிராமங்களில் நேற்று மதியம் 2:00 மணிக்கு மேல் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழைபெய்தது.

இதனையடுத்து முதுகுளத்துாரில் பெய்த மழையால் கீழரதவீதி, வடக்கூர், நாடார் தெரு, கிழக்கு தெருவில் தண்ணீர் தேங்கியுள்ளது. தெருக்களில் தேங்கிநிற்கும் தண்ணீரால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேங்கியுள்ள தண்ணீரை பேரூராட்சித்துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X