செய்தி செய்தி

தமிழ்நாடு

காட்டு யானைகளை விரட்ட யாரும் முயற்சிக்க வேண்டாம்! வனத்துறையினர் எச்சரிக்கை

Added : நவ 16, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்: காட்டு யானைகளை, விரட்ட பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.போளுவாம்பட்டி மற்றும் கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், காட்டுயானைகள், அதிகமாக காணப்படுகிறது. போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வளையபாளையம், குப்பேபாளையம், வண்டிக்காரனூர், பரமேஸ்வரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நாள்தோறும் இரவு, 8:00 மணிக்கு மேல்,



தொண்டாமுத்தூர்: காட்டு யானைகளை, விரட்ட பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.போளுவாம்பட்டி மற்றும் கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், காட்டுயானைகள், அதிகமாக காணப்படுகிறது. போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வளையபாளையம், குப்பேபாளையம், வண்டிக்காரனூர், பரமேஸ்வரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நாள்தோறும் இரவு, 8:00 மணிக்கு மேல், விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அருகில், காட்டுயானைகள் வந்து செல்கின்றன.அதேபோல, கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட, தாளியூர், மருதமலை அடிவாரம், ஐ.ஓ.பி., காலனி, பாரதியார் மற்றும் அண்ணா பல்கலை பின்புறம், காளப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், காட்டு யானை வந்து செல்கிறது.இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'காட்டுயானைகள் அதிகமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகிறது. காட்டு யானைகள் வந்தால், பொதுமக்கள் தாங்களாகவே, தீப்பந்தம் ஏந்தியோ, பட்டாசு வெடித்தோ விரட்ட முயற்சிக்க வேண்டாம்.இரவு நேரங்களில், காட்டு யானைகளின் வழித்தடங்களில், பொதுமக்கள் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். காட்டுயானைகள் வந்தால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் வனத்துறையினர் காட்டு யானைகளை, வனப்பகுதிக்குள் விரட்டிவிடுவார்கள்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X