பொது செய்தி

தமிழ்நாடு

விரும்பும் பள்ளி, கிராமம், வீடு குறித்து சிறுவர்களுக்கு போட்டி

Added : நவ 16, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : பள்ளி, கிராமம், வீடு எப்படி இருக்க வேண்டும் என்று சிறுவர்கள் விரும்புவதை அறிவதற்காக ராமநாதபுரத்தில் கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.மாநில பனை தொழிலாளர்கள், கைவினைஞர்கள் சங்க சிறுவர் மன்ற குழந்தைகள் சார்பில், கடலாடி அருகே வெட்டுக்காடு, ராமநாதபுரம் அருகே மேதலோடை, கோரவல்லி கிராம சமுதாய கூடங்களில் குழந்தைகளுக்கான இந்த போட்டிகள்

ராமநாதபுரம் : பள்ளி, கிராமம், வீடு எப்படி இருக்க வேண்டும் என்று சிறுவர்கள் விரும்புவதை அறிவதற்காக ராமநாதபுரத்தில் கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.

மாநில பனை தொழிலாளர்கள், கைவினைஞர்கள் சங்க சிறுவர் மன்ற குழந்தைகள் சார்பில், கடலாடி அருகே வெட்டுக்காடு, ராமநாதபுரம் அருகே மேதலோடை, கோரவல்லி கிராம சமுதாய கூடங்களில் குழந்தைகளுக்கான இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டுஉள்ளன.

சிறுவர்கள் பள்ளி செல்லும் நிலையில் அவர்களின் மன நிலை அறிவதற்காக அவர்கள் விரும்பும் பள்ளி, கிராமம், வீடு குறித்த கவிதை, கட்டுரை போட்டிகளில் 593 சிறுவர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பதிவு செய்துஉள்ளனர். சிறுவர்களின் கோரிக்கைகள் கலெக்டர் சங்கர்லால் குமாவத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகளில் திருப்புல்லாணி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், கடலாடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மயிலம்மாள், வெள்ளப்பாண்டி, நரிப்பையூர் ஊராட்சி தலைவர் நாராயணன், மேதலோடை ஊராட்சி தலைவர் மெனையத்தாள், கோரவள்ளி ஊராட்சி தலைவர் கோகிலவாணி, மாநில பனை தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் சங்க தலைவர் பானுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X