சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர்களை ஏற்றாமல் செல்வதா! இரு பஸ்கள் சிறைபிடிப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
மதுக்கரை: மதுக்கரையை அடுத்து வாளையார் அருகே நவக்கரை, மகேந்திரா மேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறுவர், சிறுமியர் மேல்நிலை, உயர்கல்வி படிப்புக்கு மதுக்கரை, குனியமுத்தூர் மற்றும் மாநகர் பகுதிகளுக்கு செல்கின்றனர். இப்பகுதிக்கு காந்திபுரத்திலிருந்து நகர பஸ்கள் (தடம் எண்:96) ஏழு இயக்கப்படுகின்றன.கடந்தாண்டு பரவிய கொரோனா தொற்றால், பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. தற்போது



மதுக்கரை: மதுக்கரையை அடுத்து வாளையார் அருகே நவக்கரை, மகேந்திரா மேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறுவர், சிறுமியர் மேல்நிலை, உயர்கல்வி படிப்புக்கு மதுக்கரை, குனியமுத்தூர் மற்றும் மாநகர் பகுதிகளுக்கு செல்கின்றனர். இப்பகுதிக்கு காந்திபுரத்திலிருந்து நகர பஸ்கள் (தடம் எண்:96) ஏழு இயக்கப்படுகின்றன.கடந்தாண்டு பரவிய கொரோனா தொற்றால், பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரிகள் செயல்பட துவங்கி விட்டன. இச்சூழலில், கேரளாவிலிருந்து வரும் பஸ்கள் வாளையார் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.கேரளாவிலிருந்து கோவைக்கு வருவோர், வாளையாரில் இறங்கி கோவை நகர பஸ்களில் ஏறுகின்றனர். பஸ்களில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, கூடுதல் பேர் பயணிக்கின்றனர்.இதனால் டிரைவர்கள் வாளையாரிலிருந்து புறப்பட்ட பின் மகேந்திரா மேடு, பழைய ரோடு, ஆலமரம் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி, பயணிகளை ஏற்றாமல் செல்கின்றனர்.இப்பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி அலுவலக பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் காலை பிச்சனூர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, 50 பேர் காந்திபுரம் நோக்கி வந்த மூன்று அரசு பஸ்களை சிறைபிடித்தனர்.தகவலறிந்த க.க.சாவடி போலீசார், அங்கு சென்று மக்களை சமாதானப்படுத்தினர். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் அங்கு வந்தனர்.கூடுதலாக இரு பஸ்களை இயக்குவதாகவும், அனைத்து பஸ் ஸ்டாப்களிலும் பஸ்கள் நிறுத்துவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X