சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் கண்டக்டரை கண்டித்து கைக்குழந்தையுடன் தம்பதி மறியல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
மண்டபம் : சில்லரை பாக்கி தராமல்தரக்குறைவாக பேசிய அரசு பஸ் கண்டக்டரை கண்டித்து கைக்குழந்தையுடன் கணவன் -மனைவி பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்றுமுன்தினம் மாலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் ராமேஸ்வரம்புதுரோடு பகுதியை சேர்ந்த கோபி,- சிந்து தம்பதி கைக்குழந்தையுடன் ஏறினர். டிக்கெட் கொடுத்த கண்டக்டர் ஜெய்சங்கர் சில்லரை

மண்டபம் : சில்லரை பாக்கி தராமல்தரக்குறைவாக பேசிய அரசு பஸ் கண்டக்டரை கண்டித்து கைக்குழந்தையுடன் கணவன் -மனைவி பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்றுமுன்தினம் மாலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் ராமேஸ்வரம்புதுரோடு பகுதியை சேர்ந்த கோபி,- சிந்து தம்பதி கைக்குழந்தையுடன் ஏறினர். டிக்கெட் கொடுத்த கண்டக்டர் ஜெய்சங்கர் சில்லரை பாக்கியை பிறகு தருவதாக கூறியுள்ளார்.பஸ் மண்டபம் செல்ல இருந்த நிலையில்,கோபி சில்லரை பாக்கியை மீண்டும் கண்டக்டரிடம் கேட்டார். கண்டக்டர் அலட்சியமாக இருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த கோபி தனது மனைவி, கைக்குழந்தையுடன் மண்டபம் பஸ்ஸ்டாண்டில் பஸ் நின்ற போது கண்டக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மண்டபம் போலீசார் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாக கூறி பஸ்சை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் கோட்ட மேலாளர் நலங்கிள்ளி கூறுகையில், இது சில்லரை பிரச்னை அல்ல. சில்லரை முன்கூட்டியே கொடுத்துவிட்டனர். 1, 2, 3 பஸ் என்று போட்டுவிட்டு எல்லா நிறுத்தத்திலும் ஏன்நிறுத்துகிறீர்கள் என்று தகராறு செய்துள்ளார்.ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும்போது மக்கள் பல நிறுத்தங்களில் நிற்க சொல்லி தகராறு செய்கின்றனர். அதனால் வேறு வழியின்றி ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் போது உச்சிப்புளி, மண்டபம் போன்ற இடங்களில் நிறுத்தி செல்கின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X