துளிகள் செய்தி

தமிழ்நாடு

இரண்டு விபத்து மூன்று பேர் பலி

Added : நவ 16, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: * காரமடை அடுத்த கே.புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன், 65. இவர் குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோவிலில் பணியாற்றி வந்தார். கணுவாய்பாளையம் நேரு நகரைச் சேர்ந்த சக்திவேல்,21 கோவில் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.அவரிடம் லிப்ட் கேட்டு மனோகரன் மோட்டார் சைக்கிளில் சென்றார். கோவிலின் பின்புற சாலையில் செல்லும்போது, எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள்

மேட்டுப்பாளையம்: * காரமடை அடுத்த கே.புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன், 65. இவர் குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோவிலில் பணியாற்றி வந்தார்.
கணுவாய்பாளையம் நேரு நகரைச் சேர்ந்த சக்திவேல்,21 கோவில் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.அவரிடம் லிப்ட் கேட்டு மனோகரன் மோட்டார் சைக்கிளில் சென்றார். கோவிலின் பின்புற சாலையில் செல்லும்போது, எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே சக்திவேல் இறந்தார். படுகாயம் அடைந்த மனோகரன், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.* கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், எடப்பரம்பை சேர்ந்தவர் கீதா, 55. இவரது அக்கா ராஜம்மாள், 65, உறவினர் ஓமனா, 56. இவர்கள் மூவரும், காரமடை குமார் நகரில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தனர்.
பின்பு கோவை சாலையில் ரவிராம் திருமண மண்டபம் எதிரே உள்ள, பாத்திரக் கடைக்கு செல்ல, மூவரும் கோவை சாலையில் நடந்து சென்றனர். அப்போது காரமடையில் இருந்து, கோவை நோக்கி சென்ற, இருசக்கர வாகனம், மூவர் மீதும் மோதியதில், பலத்த காயமடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் ராஜம்மாள் இறந்தார். கீதாவும், ஓமனாவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து, காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X