துளிகள் செய்தி

தமிழ்நாடு

மருத்துவக்கழிவு குறைஞ்சு போச்சு! தொற்று சரிவால் சூழலுக்கும் நிம்மதியாச்சு

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: கொரோனா தொற்று குறைந்துள்ளதன் எதிரொலியாக, தினமும் சேகரமாகும் மருத்துவக்கழிவுகளின் அளவும் குறைந்துள்ளது.கொரோனா மருத்துவக்கழிவுகளை அழிப்பதற்கு, விரிவான வழிகாட்டுதல்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. அதன்படி கோவை மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்களில் சேகரமாகும் கோவிட் மருத்துவக்கழிவுகள் அனைத்தும், தனியார் நிறுவனத்தால் சேகரிக்கப்பட்டு



கோவை: கொரோனா தொற்று குறைந்துள்ளதன் எதிரொலியாக, தினமும் சேகரமாகும் மருத்துவக்கழிவுகளின் அளவும் குறைந்துள்ளது.கொரோனா மருத்துவக்கழிவுகளை அழிப்பதற்கு, விரிவான வழிகாட்டுதல்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. அதன்படி கோவை மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்களில் சேகரமாகும் கோவிட் மருத்துவக்கழிவுகள் அனைத்தும், தனியார் நிறுவனத்தால் சேகரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.கோவையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், சராசரியாக தினமும் 6 முதல் 7 டன் மருத்துவக்கழிவுகள் சேகரித்து அழிக்கப்பட்டன. மே 22ம் தேதி அதிகபட்சமாக 11 டன் கழிவுகள் சேர்ந்தன. ஜூன் 5ம் தேதி 8.1 டன் கழிவுகள் சேகரித்து அழிக்கப்பட்டன.ஜூலை மாதவாக்கில் தொற்றின் வீரியம் குறைய தொடங்கியது. அந்த மாதம் 5ம் தேதி 1.8 டன் கழிவுகள் சேர்ந்தன. ஆக.,5ம் தேதி 761 கிலோ கழிவுகள் சேகரித்து அழிக்கப்பட்டன.தொடர்ந்து கழிவுகளின் அளவு குறைந்து வருகிறது. கடைசியாக நவ.,5ல் வெறும் 19 கிலோ மட்டுமே கோவிட் கழிவுகள் சேகரமாகியுள்ளன.மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'தொற்று சரிவால் அரசுக்கும், மக்களுக்கும் நிம்மதி. அதேவேளையில், சுற்றுச்சூழலும் கொரோனா கழிவு அச்சுறுத்தலில் இருந்து மீளும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றனர்.டன்... கிலோ ஆனது!மே மாதம் - 11 டன்ஜூன் - 8.1 டன்ஜூலை - 1.8 டன்ஆகஸ்ட் - 761 கிலோநவம்பர் - 519 கிலோ

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X