பொது செய்தி

தமிழ்நாடு

இடுக்கி மாவட்டத்தில் மீண்டும் மழை

Added : நவ 16, 2021
Share
Advertisement
மூணாறு:வானிலை மையம் 'எல்லோ அலர்ட்' விடுத்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா கட்டப்பனை அடிமாலி உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.பகலில் வெயில் தென்பட்ட நிலையில் மதியம் 2:00 மணிக்கு பிறகு தொடுபுழா கட்டப்பனை அடிமாலி உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.இடுக்கி குண்டளை அணைகளுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது. இடுக்கி அணையின் நீர்மட்டம் நவ.14ல் 398.94 அடியாக

மூணாறு:வானிலை மையம் 'எல்லோ அலர்ட்' விடுத்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா கட்டப்பனை அடிமாலி உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.பகலில் வெயில் தென்பட்ட நிலையில் மதியம் 2:00 மணிக்கு பிறகு தொடுபுழா கட்டப்பனை அடிமாலி உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.இடுக்கி குண்டளை அணைகளுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது.

இடுக்கி அணையின் நீர்மட்டம் நவ.14ல் 398.94 அடியாக இருந்தபோது மதியம் 2:00 மணிக்கு ஒரு மதகு திறக்கப்பட்டது. எனினும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் குறையவில்லை. நேற்று முன்தினம் 399.16அடி வரை உயர்ந்தது. நேற்று நீர்வரத்து குறைந்ததால் நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 399.08 அடியாக குறைந்தது.

சுற்றுலாதுறைக்குச் சொந்தமான சுற்றுலா பகுதிகள் இரண்டு நாட்களாக மூடப்பட்டன. வனத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியோருக்குச் சொந்தமான சுற்றுலா பகுதிகள் செயல்பட்டன.மூணாறில் நேற்று மழை வெகுவாக குறைந்தது. மழை குறைவால் மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் மேகங்கள் அவ்வப்போது சூழ்ந்து ரம்மியமாக காணப்பட்டது. அதனை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X