பொது செய்தி

தமிழ்நாடு

பழநியாண்டவருக்கு சீர் கொண்டு வந்த பக்தர்கள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
பழநி:பழநி ஆண்டவருக்கு கரூர் பக்தர்கள் சீர்வரிசை பொருளாக 'மெகா' காலணியை கொண்டு வந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் விதவிதமாக நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பொதுவாக காவடி எடுத்து அலகு குத்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்துவது பலரது வழக்கம்.வித்தியாசமாக கரூரைச் சேர்ந்த 200 குடும்பத்தினர் 'மெகா' சைஸ் காலணியை முருகனுக்கு வழங்க
 பழநியாண்டவருக்கு சீர் கொண்டு வந்த பக்தர்கள்

பழநி:பழநி ஆண்டவருக்கு கரூர் பக்தர்கள் சீர்வரிசை பொருளாக 'மெகா' காலணியை கொண்டு வந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் விதவிதமாக நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பொதுவாக காவடி எடுத்து அலகு குத்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்துவது பலரது வழக்கம்.வித்தியாசமாக கரூரைச் சேர்ந்த 200 குடும்பத்தினர் 'மெகா' சைஸ் காலணியை முருகனுக்கு வழங்க சீர்வரிசை பொருளாக நேற்று கொண்டு வந்திருந்தனர்.

''முருகப்பெருமான் கனவில் வந்து சொல்லும்போது சீர்வரிசை எடுத்து வருவது வழக்கம். நாங்கள் தெய்வானையின் உறவு முறை என்பதால் முருகனுக்கு இவ்வாறு சீர்வரிசை கொண்டு வருவது ஐதீகம்'' என தெரிவித்தனர்.

இதற்காக சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஒரு ஜோடி 'மெகா' காலணியை தயாரித்து தலையில் சுமந்து கும்மியடித்து வந்தனர். மேளதாளங்கள் முழங்க கிரி வீதியை சுற்றி வந்து மடத்தில் பூஜைகளை முடித்தபின்பு, மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X