பொது செய்தி

தமிழ்நாடு

'பார்க்கிங்' கட்டணத்தை தரும்படி ஆணையம் உத்தரவு

Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை:வீடு ஒப்படைப்பு தாமதமானதால், வாகன நிறுத்துமிடம் ஒதுக்குவதற்கு வசூலித்த, 2 லட்சம் ரூபாயை திருப்பித் தர, கட்டுமான நிறுவனத்துக்கு, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கோவை, சூலுார், கடம்பாடி பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, 2014ல், கே. நாராயணன், வி.நாராயணன் ஆகியோர், 29.39 லட்சம் ரூபாய்

சென்னை:வீடு ஒப்படைப்பு தாமதமானதால், வாகன நிறுத்துமிடம் ஒதுக்குவதற்கு வசூலித்த, 2 லட்சம் ரூபாயை திருப்பித் தர, கட்டுமான நிறுவனத்துக்கு, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, சூலுார், கடம்பாடி பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, 2014ல், கே. நாராயணன், வி.நாராயணன் ஆகியோர், 29.39 லட்சம் ரூபாய் செலுத்தினர்.இதற்கான ஒப்பந்தப்படி, கட்டுமான நிறுவனம் வீட்டை கட்டி முடித்து ஒப்படைக்கவில்லை.

மேலும், வாகன நிறுத்துமிடம், மின்சார இணைப்பு ஆகியவற்றுக்காக, தனித்தனியாக கூடுதல் தொகையை வசூலித்ததாக கூறப்படுகிறது.இது குறித்து, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தனர்.

ஆணைய விசாரணை அதிகாரி சரவணன் பிறப்பித்த உத்தரவு:கட்டுமான நிறுவனம் பணிகளை தாமதமாக செய்தது உறுதியாகிறது. எனவே, வாகன நிறுத்துமிடம் ஒதுக்குவதாக கூறி வசூலித்த, 2 லட்சம் ரூபாயை மனுதாரர்களுக்கு திருப்பித் தர வேண்டும்.

மேலும், இழப்பீடாக 25 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவுக்காக, 20 ஆயிரம் ரூபாயை கட்டுமான நிறுவனம், மனுதாரர்களுக்கு, 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X