கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வன்னியர் இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு

Updated : நவ 17, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி :வன்னியர் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்த, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்னியருக்கான, 10.5 சதவீத உள் ஒதுக்கீடை அமல்படுத்த அனுமதிக்கும்படி மனுவில் கோரப்பட்டுள்ளது.தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்
வன்னியர்,இடஒதுக்கீடு, அரசு   மேல் முறையீடு

புதுடில்லி :வன்னியர் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்த, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம்
கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்னியருக்கான, 10.5 சதவீத உள் ஒதுக்கீடை அமல்படுத்த அனுமதிக்கும்படி மனுவில் கோரப்பட்டுள்ளது.தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூக மக்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம், அப்போதைய அ.தி.மு.க., அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், இதற்கான அரசாணையை தி.மு.க., அரசு வெளியிட்டது.


அவசர சட்டம்இந்நிலையில் வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, கடந்த 1ம் தேதி தீர்ப்பு அளித்தனர். 'ஜாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்தாமல் இடஒதுக்கீடு வழங்கியதை ஏற்க முடியாது; இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சட்டசபை தேர்தலுக்காக, அவசரமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது' என, தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், 'இதுபோன்ற இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?' என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, 'இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.இந்நிலையில் தமிழக அரசு சார்பில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.


ஆலோசனைமனுவில் கூறப்பட்டுள்ளதாவது:மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடையே சமூக நீதியை பரவலாக்கும் வகையில் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது.இடஒதுக்கீடு தொடர்பாக இந்திரா சஹானே வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பிரிவு கமிஷன் உருவாக்கப்பட்டது. அந்த கமிஷனின் தலைவர், வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தார். அதே நேரத்தில் கமிஷனில் உள்ள சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து இந்தாண்டு பிப்ரவரியில், தமிழக அரசு கொள்கை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இது தொடர்பாக கமிஷனின் தற்போதைய தலைவரின் ஆலோசனை கேட்கப்பட்டது. இடஒதுக்கீடு வழங்கலாம் என, கமிஷன் தலைவர் மீண்டும் பரிந்துரை செய்துள்ளார்.


சம உரிமைதமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அளித்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலிடப்படாத பிரிவினர் தொடர்பான மக்கள்தொகை கணக்குகள் அடிப்படையிலேயே, வன்னியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது.அதிகாரப்பூர்வமான புள்ளி விபரங்கள் இருக்கும் நிலையில், கமிஷனின் ஒரு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலேயே, இந்த சட்டம் செல்லாது என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு அளித்துள்ளது ஏற்புடையதல்ல.ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, மக்களின் நலனுக்காக இடஒதுக்கீடு வழங்கி ஆணைகள் பிறப்பிக்க அதிகாரம் உள்ளது. மேலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில், இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தீர்ப்புக்கு எதிர்ப்புஅனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் அரசாணையின்படி வன்னியருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடை அமல்படுத்த அனுமதிக்க வேண்டும்.இந்த அரசாணைக்கு தடை விதிக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து பா.ம.க., சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
17-நவ-202122:58:47 IST Report Abuse
sankaseshan வன்னியர் ஓட்டுவங்கியை குறிவைத்து கொண்டு வரப்பட்ட சட்டம் கோர்ட்டில் நிற்காது பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு ஒதுக்கப்பட்ட 10% TN. அரசால் அமல்படுத்தவில்லை
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
17-நவ-202119:05:34 IST Report Abuse
chennai sivakumar Reservation should be made only on income basis and not e basis.
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
17-நவ-202118:05:48 IST Report Abuse
K. V. Ramani Rockfort அனைத்து ஜாதி, மதத்திலுமே ஏழை மக்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கி ஆதரவின்றி கிடக்கிறார்கள், அவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு அளித்தால் போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X