செய்தி செய்தி

தமிழ்நாடு

'போக்சோ' என்றால் என்ன பள்ளிகளில் நோட்டீஸ்!

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டுவதற்கான நடவடிக்கையை, போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.கோவையில், 17 வயது மாணவி பாலியல் தொல்லை காரணமாக, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக, இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போக்சோ

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டுவதற்கான நடவடிக்கையை, போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.கோவையில், 17 வயது மாணவி பாலியல் தொல்லை காரணமாக, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக, இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.மாணவி புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் (எ) மினி ஜாக்சன் மீதும், போக்சோ சட்டம் பாய்ந்தது.இந்நிலையில், பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்த நோட்டீஸ் ஒட்ட, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதில், போக்சோ என்றால் என்ன, அந்த குற்றத்திற்கு என்ன தண்டனை, போக்சோ சட்டத்தின் சிறப்பம்சங்கள், புகார் அளிப்பது எப்படி உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X