தமிழ்நாடு

79 பேருக்கு வாரிசு அடிப்படையில் வேலை! தூய்மை பணியாளர் வேலையை 9 பேர் நிராகரிப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, வாரிசு அடிப்படையில் நேற்று, 79 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.கோவை மாநகராட்சி ஊழியர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒருவருக்கு, கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கப்படும்.அவ்வகையில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய, வாரிசுதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு,



கோவை: கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, வாரிசு அடிப்படையில் நேற்று, 79 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.கோவை மாநகராட்சி ஊழியர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒருவருக்கு, கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கப்படும்.அவ்வகையில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய, வாரிசுதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, கல்விச்சான்றிதழ்கள் மற்றும் குடும்ப விபரங்கள் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டிருந்தது.நியமனம் மற்றும் மேல்முறையீட்டுக்குழு கூட்டம், கமிஷனர் ராஜகோபால் தலைமையில் நேற்று நடந்தது. அதன் உறுப்பினர்களான, துணை கமிஷனர் ஷர்மிளா, உதவி கமிஷனர் (நிர்வாகம்) சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட வாரிசுதாரர்கள் ஒவ்வொருவரையும் கமிஷனர் அழைத்து, நேர்காணல் நடத்தினார். மாநகராட்சியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தேர்ச்சி திறன் உதவியாளர் கிரேடு-2, டிரைவர் மற்றும் துாய்மை பணியாளர் பணியிடங்கள் தொடர்பாக, வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.'துாய்மை பணியை தேர்வு செய்து விட்டு, பட்டப்படிப்பு படித்திருக்கிறோம்; எங்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் கொடுங்கள் என கோரிக்கை வைக்கக்கூடாது. பணியிடத்தை தெளிவாக தேர்வு செய்து கொள்ளுங்கள். படித்துள்ள படிப்புக்கேற்ற வேலை வேண்டுமெனில், அப்பணியிடங்கள் காலியாகும் வரை காத்திருங்கள்' என, மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதனால், 78 பணியிடங்களில், 9 பேர் தற்போது வேலை வேண்டாம் என ஒதுங்கினர். மீதமுள்ள, 69 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இதேபோல், கல்விப்பிரிவில், 7 பதிவுரு எழுத்தர் பணிக்கும், 3 இளநிலை உதவியாளர் பணிக்கும் வாரிசு அடிப்படையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு விரைவில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட இருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X