நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி புகார்

Added : நவ 16, 2021
Share
சென்னை: நடிகர் சூர்யா தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான, ஜெய்பீம் திரைப்படம், வன்னியர் - -இருளர் சமுதாயம் இடையே கலவரத்தை துாண்டும் விதமாக அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி, இயக்குனர் கவுதமன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.'நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர்

சென்னை: நடிகர் சூர்யா தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான, ஜெய்பீம் திரைப்படம், வன்னியர் - -இருளர் சமுதாயம் இடையே கலவரத்தை துாண்டும் விதமாக அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக, பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி, இயக்குனர் கவுதமன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.'நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லாவிட்டால்,5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும்' என, வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும், சூர்யா மீது நடவடிக்கை கோரி, பா.ம.க.,வினர் போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை மவுன்ட் இணை கமிஷனர் அலுவலகத்தில், பா.ம.க., மாநில துணை பொதுச் செயலர் வெங்கடேசன் தலைமையில் கட்சியினர் புகார் அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X