பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தரத்தை உறுதி செய்யுங்கள் கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை:மழைக்கு பிந்தைய நோய் தொற்றுகளை தடுக்க, குடிநீர் தரத்தை உறுதி செய்யுமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, செயலர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பருவமழைக்கு முன், மழை பெய்யும் போது, மழைக்கு பின் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, ஏற்கனவே மக்கள்

சென்னை:மழைக்கு பிந்தைய நோய் தொற்றுகளை தடுக்க, குடிநீர் தரத்தை உறுதி செய்யுமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, செயலர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பருவமழைக்கு முன், மழை பெய்யும் போது, மழைக்கு பின் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, ஏற்கனவே மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, முதல்வர் மற்றும் தலைமை செயலர் தலைமையில், தனித்தனியே நடைபெற்ற ஆய்வு கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது.

மழை வடிந்த இடங்களில் 'பிளீச்சிங் பவுடர்கள்' மற்றும் கிருமி நாசினிகள் தெளிப்பது; மருத்துவ முகாம்கள் நடத்துவது ஒருபுறம் இருந்தாலும்; மக்களுக்கு வினியோகிக்கப்படும் தண்ணீரில், உரிய அளவு குளோரின் கலந்து, பாதுகாப்பான நீரை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

தண்ணீரில் ஏற்படும் மாசால், வயிற்றுப்போக்கு மட்டுமல்லாது, கணைய அழற்சி, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது. எனவே, அதை கருத்தில் கொண்டு, குடிநீரில் பாதுகாப்பை முறையாக கண்காணிக்க வேண்டும்.

இதை தவிர, கொசுக்கள் வாயிலாக பரவும் சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. மழை காலங்களில் நுரையீரல் சார்ந்த நோய்களும், சேற்றுப் புண்களும் ஏற்படக்கூடும். தரமற்ற உணவுகளால் உடல் உபாதைகள் வரவும் வாய்ப்புண்டு.

அவற்றை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரிவாக மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, அரசு விடுத்துள்ள வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து, கொரோனாவுக்கு நடுவில் பருவகால நோய்களை தடுக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X