சிட்டி கிரைம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
லவ் மேட்டரு...அடி விழுந்தது!செல்வபுரம், பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன்,26. இவர் அப்பகுதியில் உள்ள இளம்பெண்ணை காதலித்து வந்தார். காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிந்ததால் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்தனர்.இந்நிலையில், மகேஸ்வரன் பிருந்தாவன் கார்டன் வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக

லவ் மேட்டரு...அடி விழுந்தது!செல்வபுரம், பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன்,26. இவர் அப்பகுதியில் உள்ள இளம்பெண்ணை காதலித்து வந்தார். காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிந்ததால் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்தனர்.இந்நிலையில், மகேஸ்வரன் பிருந்தாவன் கார்டன் வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் மகேஸ்வரனை தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த இளைஞரை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கத்தியை காட்டி பணம் பறிப்புபீகார் மாநிலத்தை சேர்ந்த முன்னாகுமார்,32. கட்டட தொழிலாளியான இவர், மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வந்த 4 பேர், கத்தியை காட்டி அவரிடமிருந்த மொபைல்போன், ரூ.1000 பணத்தை பறித்து சென்றனர். அதிர்ச்சியடைந்த அவர், சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அசோக்குமார், 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.குறுஞ்செய்தி அனுப்பி மோசடி!கோவை ஆர்.எஸ்.புரம்.,பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்,38. இவரது மொபைல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், நீங்கள் உங்களது பான்கார்டை பதிவேற்றம் செய்யவில்லை என்றால், வங்கி கணக்கு முடக்கப்படும் என பதிவிடப்பட்டிருந்தது. உடனே, அவர் அந்த லிங்க்கை அழுத்த, அடுத்த நொடியே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் மாயமானது. அதிர்ச்சியடைந்த அவர், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மோசடி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இன்ஜினியர் மாணவர் மாயம்கரூரைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் தங்கராஜ்,21; இன்ஜினியர். தடாகம் ரோடு, இடையர்பாளையம், மாசாணி அம்மன் நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, ஆர்.எஸ்.புரத்தில் அரசு தேர்வுக்கான பயிற்சி அகாடமியில் படித்து வந்தார். கடந்த, 10ம் தேதி மாலை, 4:00 மணிக்கு வீட்டுக்கு வந்தவர் இரவு, 8:00 மணியளவில் வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. இது குறித்து, தங்கராஜ் தந்தை காளியப்பன் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் காணாமல் போன தங்கராஜை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X