அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் துறை கட்டடங்கள் திறப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை:வேளாண் துறை சார்பில், 183.73 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், 147.78 கோடி ரூபாயில் சேமிப்பு கிடங்குகள், ஏலக் கூடங்கள், தரம் பிரிக்கும் கூடங்கள், விவசாயிகள் ஓய்வு அறைகள்; 22.60 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க

சென்னை:வேளாண் துறை சார்பில், 183.73 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், 147.78 கோடி ரூபாயில் சேமிப்பு கிடங்குகள், ஏலக் கூடங்கள், தரம் பிரிக்கும் கூடங்கள், விவசாயிகள் ஓய்வு அறைகள்; 22.60 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேளாண் பல்கலையின்கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிலையங்களில், 12.35 கோடி ரூபாயில் கல்வி நிறுவன கட்டடங்கள்; 1 கோடி ரூபாயில் வேளாண் பொறியியல் விரிவாக்க மையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.

பொதுப்பணித் துறைபொதுப்பணித் துறையில், வேலுார் மாவட்டம், காட்பாடியில், 1.27 கோடி ரூபாயில், இரண்டு தளங்களுடன் கோட்ட, உபகோட்ட அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வேலு, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமை செயலர் தயானந்த் கட்டாரியா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X