நடப்பாண்டில் நேரடி செமஸ்டர் தேர்வுகள்: கோவை அரசு கலைக் கல்லூரி நிர்வாகம் திட்டம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை அரசு கலைக்கல்லூரியில், கொரோனாவால் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்தப்பட்டது. தொற்று குறைந்ததால்,செப்., முதல் நேரடி வகுப்புகள் நடக்கின்றன.கல்லூரி வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருவதால், இளங்கலை, இரண்டு,



கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை அரசு கலைக்கல்லூரியில், கொரோனாவால் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்தப்பட்டது. தொற்று குறைந்ததால்,செப்., முதல் நேரடி வகுப்புகள் நடக்கின்றன.கல்லூரி வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருவதால், இளங்கலை, இரண்டு, மூன்றா-மாண்டு மாணவர்கள், முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்து வருகின்றன.மாணவர்களின் நலன் கருதி, நேரடியாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இளங்கலை இரண்டு, மூன்றாம் ஆண்டு, முதுகலை இரண்டா-ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் டிச.,ல் நடக்க உள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்., ல் செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளன.கல்லூரி முதல்வர் கலைச்செல்வி கூறுகையில், ''மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதுவதால் அவர்களின் முழுத்திறனையும் கண்டறிய முடியவில்லை. இதைக்கருத்தில் கொண்டே அனைத்து மாணவர்களுக்கும் நேரடி தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X