ஓரினச்சேர்க்கையாளரை நீதிபதியாக்க பரிந்துரை

Added : நவ 17, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஓரினச்சேர்க்கையாளரான மூத்த வழக்கறிஞர் சவுரவ் கிர்பாலை டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூபிந்தர்நாத் கிர்பாலின் மகனான சவுரவ் கிர்பால், 49, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். பின், அந்நாட்டில் உள்ள
 ஓரினச்சேர்க்கையாளரை நீதிபதியாக்க பரிந்துரை

புதுடில்லி:ஓரினச்சேர்க்கையாளரான மூத்த வழக்கறிஞர் சவுரவ் கிர்பாலை டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூபிந்தர்நாத் கிர்பாலின் மகனான சவுரவ் கிர்பால், 49, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். பின், அந்நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில் சட்ட மேற்படிப்பு முடித்தார்.உச்ச நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை பொது வெளியில் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தன்னை பரிந்துரைக்குமாறு, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் சவுரவ் கிர்பால் பலமுறை விண்ணப்பித்தார். ஓரினச்சேர்க்கையாளர் என்பதை காரணம் காட்டி, இவரது விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான கொலீஜியத்திடம் சவுரவ் கிர்பால் மீண்டும் விண்ணப்பித்தார்.இவரது விண்ணப்பத்தை ஏற்ற கொலீஜியம், அவரை டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தாலும், கொலீஜியம் தங்கள் பரிந்துரையை மீண்டும் சமர்ப்பித்தால் மத்திய அரசு அனுமதி அளிப்பதை தவிர வேறு வழியில்லை.

எனவே, கொலீஜியத்தின் பரிந்துரையை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இது நம் நாட்டின் பாரபட்சமற்ற தன்மையை உணர்த்தும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X