பொது செய்தி

இந்தியா

சிலவரி செய்திகள்...: பொது

Added : நவ 17, 2021
Share
Advertisement
வீடு தேடி ரேஷன்கோல்கட்டா: வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று துவக்கி வைத்தார். இதன் மூலம் மாநிலத்தில், 10 கோடி பேர் பயன் பெறுவர்.சல்மான் உதவி நாடல்ஜால்னா: மஹாராஷ்டிராவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயங்கி வருகின்றனர். இது தொடர்பாக

வீடு தேடி ரேஷன்

கோல்கட்டா: வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று துவக்கி வைத்தார். இதன் மூலம் மாநிலத்தில், 10 கோடி பேர் பயன் பெறுவர்.

சல்மான் உதவி நாடல்

ஜால்னா: மஹாராஷ்டிராவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயங்கி வருகின்றனர். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் உதவியை, மாநில அரசு நாடியுள்ளது.

அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு

புதுடில்லி: சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தலைவர்கள் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் சமீபத்தில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக, மத்திய பார்லி., விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் திரிணமுல் மூத்த தலைவர் டெரக் ஓ பிரையன், சமூக வலை தளத்தில் பரஸ்பரம் பதிவுகளை வெளியிட்டனர். 'தற்போதுள்ள, 17வது லோக்சபாவில் மட்டும், 10 மசோதாகளுக்கு, நான்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது' என, டெரக் ஓபிரையன் பதிவிட்டார்.
அதற்கு, 'காங்., ஆட்சியில், 524 அவசர சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐந்தாவது லோக்சபாவில் மட்டும், 96 அவசர சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன' என, பிரஹலாத் ஜோஷி குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இந்த அவசர சட்டங்களை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பார்லி.,யில் போராட திட்டம்

புதுடில்லி: கொரோனா தொற்று பரவலுக்கு பின் நடந்த பார்லி., கூட்டத் தொடரில் பங்கேற்க பத்திரிகையாளர்களுக்கு தற்காலி தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வரும், 29ல் துவங்க இருக்கும் குளிர்கால கூட்டத்தொடரின் போது, பார்லி., மைய மண்டபத்திற்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டது.

'பார்லி., கூட்ட தொடரில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்' என, லோக்சபா சபாநாயகருக்கு இந்திய பத்திரிகையாளர்கள் மன்றம் கடிதம் எழுதி உள்ளது.

இந்த தடையை எதிர்த்து டில்லியை சேர்ந்த மூத்த செய்தியாளர்கள் 50 பேர், வரும் 29ல் பார்லி.,யில் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X