பொது செய்தி

தமிழ்நாடு

உள்கட்டமைப்பு வசதிகளுக்கான கட்டணம் ரூ.4,567 கோடி வசூல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை:புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது வசூலிக்கப்படும் உள்கட்டமைப்பு வசதி நிதி, 4,567 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, வீட்டுவசதி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளின் தேவையை, அரசு துறைகள் தான் பூர்த்தி செய்ய
 உள்கட்டமைப்பு வசதிகளுக்கான கட்டணம் ரூ.4,567 கோடி வசூல்

சென்னை:புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது வசூலிக்கப்படும் உள்கட்டமைப்பு வசதி நிதி, 4,567 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, வீட்டுவசதி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளின் தேவையை, அரசு துறைகள் தான் பூர்த்தி செய்ய வேண்டும்.இதற்காக, 2007 முதல் புதிய கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது, உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்காக கட்டணமாக, சதுர மீட்டருக்கு 375 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுகிறது.

நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., -சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., ஆகியவை இந்நிதியை அரசு சார்பில் வசூலிக்கின்றன. இவ்வாறு வசூலிக்கப்படும் நிதி, பொதுவான ஒரே கணக்கில் சேர்க்கப்பட்டு, பல்வேறு துறைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இது குறித்து, வீட்டுவசதி துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், 2021 மார்ச் இறுதி வரை, 4,567.43 கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில், இது 5,000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கிறோம்.இதுவரை வசூலான 4,567 கோடி ரூபாயில், 4,151.77 கோடி ரூபாய், சென்னை மெட்ரோ ரயில், நகராட்சி நிர்வாகம், மாநகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட 10 துறைகளின் வளர்ச்சி திட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X