உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு அண்ணாமலை அஸ்திவாரம்| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு அண்ணாமலை அஸ்திவாரம்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (6)
Share
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட ஐந்து மண்டலங்களில், மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, திராவிட கட்சிகள் பாணியில், அஸ்திரத்தை பிரயோகிக்க திட்டமிட்டுள்ளார்.சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகையில், 'தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்
 உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு அண்ணாமலை அஸ்திவாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட ஐந்து மண்டலங்களில், மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, திராவிட கட்சிகள் பாணியில், அஸ்திரத்தை பிரயோகிக்க திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகையில், 'தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றதன் வாயிலாக புதுக்கணக்கு துவக்கப்பட்டுள்ளது' என்றார். அவரது பாராட்டு பேச்சு, அண்ணாமலைக்கு புத்துணர்ச்சியும், உற்சாகத்தையும் அளித்துள்ள நிலையில், சென்னை கமலாலயத்தில், மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.


ஆலோசனை


அதில், அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்று, தேர்தல் தொடர்பான ஆரம்ப பணிகள் குறித்து ஆலோசித்தனர்.'தி.மு.க., அமைச்சர்களின் துறை ரீதியான குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்துவது வாயிலாக, ஆளுங்கட்சிக்கு அண்ணாமலை சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்' என, அ.தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர், கொங்கு மண்டல பா.ஜ., நிர்வாகி ஒருவரிடம் பாராட்டி பேசி உள்ளார். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலுார் ஆகிய, ஐந்து மண்டலங்களில் அடங்கிய பூத் கமிட்டிகள் பலப்படுத்துவது மற்றும் உள்ளாட்சி பொறுப்புகள் வழங்கி, தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதிலும் அண்ணாமலை தீவிரம் காட்டி வருகிறார்.

சென்னை மண்டல பொறுப்பாளர்களாக, முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம். நகராட்சி பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் காயத்ரிதேவி உட்பட 10 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவை மண்டல பொறுப்பாளர்களாக, தேசிய இளைஞரணி முன்னாள் துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் உட்பட எட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மண்டல பொறுப்பாளர்களாக, மாநில செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, மாநகராட்சிக்கு, மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் உட்பட 11 நிர்வாகிகள். திருச்சி மண்டல பொறுப்பாளர்களாக, மாநில துணைத் தலைவர் முருகானந்தம் உட்பட 11 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மண்டல பொறுப்பாளர்கள்வேலுார் மண்டலத்திற்கு மாநில துணைத் தலைவர் நரேந்திரன், முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் உட்பட 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூாட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கணிசமாக கைப்பற்றுவதற்காக, திராவிட கட்சிகளின் பாணியில் பா.ஜ.,வில் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


ரூ.5,000 நிவாரணம் கோரி 19ல் ஆர்ப்பாட்டம்வெள்ள நிவாரண நிதியாக, குடும்பத்திற்கு 5,000 ரூபாய் வழங்கக் கோரி, தமிழக பா.ஜ., சார்பில், 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இது குறித்து, தமிழக பா.ஜ., பொது செயலர் கரு.நாகராஜன் விடுத்த அறிக்கை:

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், சில நாட்களாக பெய்த கன மழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்காலும், ஏழை, எளிய மக்களும், நடுத்தர மக்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்து உடைமைகள் பாழாகிஉள்ளன. தினசரி வேலைவாய்ப்பை நம்பி இருப்பவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், 5,000 ரூபாய் தர வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

ஆகவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5,000 ரூபாய் நிவாரண நிதி வழங்க அரசை வலியுறுத்தி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட, 11 மாவட்டங்களில், பா.ஜ., சார்பில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.அன்றைய தினம் காலை 10:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட மக்களும் பங்கேற்பர்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X