பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருதுக்கு டிச.,15க்குள் விண்ணப்பிக்கலாம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை:அண்ணா பதக்கம் மற்றும் கபீர் புரஸ்கார் விருது பெற, டிசம்பர், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஆண்டுதோறும், குடியரசு தின விழாவில் முதல்வரால் வழங்கப்படும். பதக்கம் பெறுபவருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், தகுதியுரை வழங்கப்படும். அடுத்த ஆண்டு வழங்க உள்ள பதக்கத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.வீர, தீர

சென்னை:அண்ணா பதக்கம் மற்றும் கபீர் புரஸ்கார் விருது பெற, டிசம்பர், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஆண்டுதோறும், குடியரசு தின விழாவில் முதல்வரால் வழங்கப்படும். பதக்கம் பெறுபவருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், தகுதியுரை வழங்கப்படும். அடுத்த ஆண்டு வழங்க உள்ள பதக்கத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வீர, தீர செயல் புரிந்த, தமிழகத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு எதுவுமில்லை.விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன், மாவட்ட கலெக்டர் வழியாக அல்லது https://awards.tn.gov.in இணையதளம் வழியாகவோ, 'அரசு செயலர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை - 9' என்ற முகவரிக்கு, டிச., 15க்கு முன் அனுப்ப வேண்டும்.

கபீர் புரஸ்கார் விருதுஇது சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான விருது. கலவரம் அல்லது வன்முறையின் போது, ஒரு ஜாதி, இனம், வகுப்பை சேர்ந்தவர்கள், பிற ஜாதி, இன வகுப்பை சேர்ந்தவர்களையோ; அவர்கள் உடைமைகளையோ காப்பாற்றியதற்காக, இந்த விருது வழங்கப்படுகிறது. உடல் மற்றும் மன வலிமையை பாராட்டி வழங்கப்படுகிறது.

இவ்விருது மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு முறையே, 20 ஆயிரம்; 10 ஆயிரம்; 5,000 ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை வழங்கப்படும். இவ்விருதுக்கும் டிச., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்விருதும் குடியரசு தின விழாவில், முதல்வரால் வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X