அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிசேரியனை தவிர்க்க அமைச்சர் வலியுறுத்தல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை:''குறிப்பிட்ட தேதிகளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதை, தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், 11ம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவம்; 40 சதவீதம் சிசேரியன்.சிறப்பாக

சென்னை:''குறிப்பிட்ட தேதிகளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதை, தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், 11ம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவம்; 40 சதவீதம் சிசேரியன்.சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கிய அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

மாநிலம் முழுதும் அரசு மருத்துவமனைகளில், 65 சதவீதம் பிரசவம் நடைபெறுகிறது; 35 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில், 65 சதவீதமாக உள்ள சுகப் பிரசவம், தனியார் மருத்துவமனைகளில் 37 சதவீதமாக குறைந்துள்ளது. வெளிநாடுகளில் 80 சதவீதம் சுகப் பிரசவம்; 20 சதவீதம் மட்டுமே சிசேரியன். தமிழகத்தில் முன்பெல்லாம், 100 சதவீதம் சுக பிரசவமாக இருந்தது.

தற்போது, சுகப் பிரசவம் குறைந்து சிசேரியன் சதவீதம் அதிகரித்துள்ளது.குறிப்பிட்ட தேதிகளில், குழந்தையை வெளியில் எடுப்பது தான் காரணமாக உள்ளது. இவற்றை ஊக்கப்படுத்தக் கூடாது என, டாக்டர்களை அறிவுறுத்தி உள்ளோம். தேவையில்லாத சிசேரியன் தவிர்க்குமாறு, தனியார் மருத்துவமனைகளுக்கு கடிதம் எழுத உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், துறை செயலர் ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழு இயக்குனர் தரேஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X