அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிபந்தனையின்றி கடன் பெற தமிழகம் கோரிக்கை

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை:'நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் நிபந்தனைகள் ஏதுமின்றி, மாநிலங்கள் கடன் பெற அனுமதிக்க வேண்டும்' என, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.நாட்டின் தொழில் முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, மாநில முதல்வர்கள் மற்றும் நிதி அமைச்சர்களுடன், மத்திய நிதி

சென்னை:'நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் நிபந்தனைகள் ஏதுமின்றி, மாநிலங்கள் கடன் பெற அனுமதிக்க வேண்டும்' என, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் தொழில் முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, மாநில முதல்வர்கள் மற்றும் நிதி அமைச்சர்களுடன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று முன்தினம் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தினார்.


விரைவுபடுத்த வேண்டும்

தமிழக அரசு சார்பில், நிதி அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:சில மத்திய சட்டங்களின் கீழ் அனுமதி பெறுவதற்கான காலவரம்பை, நான்கு மாதங்களில் இருந்து ஒரு மாதமாக குறைக்க வேண்டும். மருத்துவ சாதனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை விரைவுபடுத்த வேண்டும்.

சென்னை, கோவை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களை விரிவுப்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்கு, தீர்வு காண வேண்டும். மதுரை விமான நிலையத்தை விரிவுப்படுத்த, நிலம் கையகப்படுத்தப்பட்டு, இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு ஒப்படைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அப்பகுதியில் கூடுதல் வர்த்தகம் மற்றும் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த, மதுரை விமான நிலையத்தை, விரைவில் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.

துாத்துக்குடி துறைமுகத்தை விரிவுப்படுத்தும் திட்டத்தை, விரைவில் செயல்படுத்த வேண்டும். கொரானாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான, ஒரு விரிவான தொகுப்பினை, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.


மேம்பாட்டுக் கொள்கை



சென்னை - கன்னியாகுமரி சாலை முழுதையும், எட்டு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், நிலுவையில் உள்ள 11 நெடுஞ்சாலை திட்டங்களை, விரைந்து நிறைவேற்ற வேண்டும்.கடலில் காற்றாலை மின் உற்பத்தி மேம்பாட்டுக் கொள்கையை, மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள், நிபந்தனைகள் எதுவுமின்றி மாநிலங்கள் கடன் பெற அனுமதிக்கப்பட வேண்டும். கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளும் திறன் அடிப்படையில், வரம்புகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X