சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு 20ல் பாராட்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு 20ல் பாராட்டு விழா

Added : நவ 17, 2021
Share
சென்னை:'ஐ.பி.எல்., - 2021' கோப்பையை வென்ற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னையில், 20ம் தேதி பாராட்டு விழா நடக்க உள்ளது.ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர், இந்த ஆண்டு கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இறுதி போட்டியில், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது.சாம்பியன் பட்டம் வென்ற, சென்னை

சென்னை:'ஐ.பி.எல்., - 2021' கோப்பையை வென்ற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னையில், 20ம் தேதி பாராட்டு விழா நடக்க உள்ளது.

ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர், இந்த ஆண்டு கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இறுதி போட்டியில், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என, அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்திருந்தார். அதன்படி, 20ம் தேதி மாலை 5:30 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடக்கிறது.

விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று அணி வீரர்களை பாராட்ட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி மற்றும் வீரர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். விழா அழைப்பிதழை நேற்று, 'தி இந்தியா சிமென்ட்ஸ்' நிறுவன துணைத் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளருமான சீனிவாசன், தலைமை செயலத்தில் முதல்வரை சந்தித்து வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X