கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி சிவசங்கர் பாபா வழக்கு

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை:தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.சி.ஐ.டி.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அதன் நிறுவனரான சிவகங்கர் பாபாவுக்கு எதிராக புகார்
 தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி சிவசங்கர் பாபா வழக்கு

சென்னை:தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.சி.ஐ.டி.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அதன் நிறுவனரான சிவகங்கர் பாபாவுக்கு எதிராக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, 2021 ஜூன் 13 ல், டில்லியில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு, சென்னை அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீதான வழக்கு விசாரணை, செங்கல்பட்டு கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. பொறுப்பு நீதிபதி ரீனா முன், சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிபதி, 30ம் தேதி வரை, சிவசங்கர் பாபாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கக் கோரி, உயர் நீதி மன்றத்தில் சிவசங்கர் பாபா தாக்கல் செய்த மனு:
கைது செய்யப்படுவதற்கு முன், டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டேன். அறுவை சிகிச்சை நடந்தது. நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டுள்ளேன். தற்போது சிறை மருத்துவமனையில் தொடர்ந்து உள்ளேன். என் வாழ்வில் கடைசி கட்டத்தில் உள்ளேன். முறையான சிகிச்சை பெற்றால் தான், வாழ்நாளை நீட்டிக்க முடியும்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் தான், முறையான சிகிச்சை கிடைக்கும். அதற்கான செலவை ஏற்கிறேன்.எனவே, தனியார் மருத்துவமனையில் சேர்த்து முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, சி.பி.சி.ஐ.டி., மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 25ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X