பொது செய்தி

தமிழ்நாடு

கும்பகோணம் ராமலிங்கம் கொலையாளிகள் தகவல் தந்தால் தலா ரூ.5 லட்சம் சன்மானம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை:'கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு குற்றவாளிகள் ஐந்து பேர் குறித்து தகவல் அளித்தால், ஒரு நபருக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' என, தேசிய புலனாய்வு முகமை எனப்படும், என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.மதமாற்ற நிகழ்வு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 45; பாத்திர கடை நடத்தி வந்தார். இவர், அதே பகுதியில் நடந்த

சென்னை:'கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு குற்றவாளிகள் ஐந்து பேர் குறித்து தகவல் அளித்தால், ஒரு நபருக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' என, தேசிய புலனாய்வு முகமை எனப்படும், என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.


மதமாற்ற நிகழ்வு



தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 45; பாத்திர கடை நடத்தி வந்தார். இவர், அதே பகுதியில் நடந்த மதமாற்ற நிகழ்வுகளை தட்டிக் கேட்டதால், 2019 பிப்., 5ல் கொலை செய்யப்பட்டார்.இது குறித்து, என்.ஏ.ஐ., அதிகாரிகள் விசாரித்து, திருவிடைமருதுார், கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 13 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில், திருவிடை மருதுாரை சேர்ந்த முகமது அலி ஜின்னா, 37; ஷாஹுல் ஹமீத், 30; நபீல் ஹாசன், 31; மேலக்காவேரியை சேர்ந்த அப்துல் மஜீத், 40; பாபநாசத்தை சேர்ந்த புர்ஹானுதீன், 31 ஆகிய ஐந்து பேரை தேடப்படும் குற்றவாளியாக, பூந்தமல்லி என்.ஐ.ஏ., நீதிமன்றம் அறிவித்தது.இந்நிலையில், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐந்து பேர் குறித்து தகவல் தருபவர்களுக்கு, நபர் ஒருவருக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்.
.மின்னஞ்சல்தகவல் தெரிவிக்க விரும்புவோர், 'தேசிய புலானய்வு முகமை, எண் 10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை - 10' என்ற முகவரியிலும், 99623 61122; 044 - 2661 5100 என்ற, எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், info-che.nia@gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தகவல் அளிக்கலாம்.தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்ற வாசகத்துடன் அடங்கிய 'போஸ்டர்' களை, சென்னை, தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஒட்டிஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X