கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மீனவர் உடல் மறு பிரேத பரிசோதனை: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 17, 2021
Share
Advertisement
மதுரை:புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கோட்டைப் பட்டினம் பிருந்தா தாக்கல் செய்த மனு:எனது கணவர் ராஜ்கிரண். இவர் அக்.,18 ல்சிலருடன் கடலில் மீன் பிடிக்க படகில்சென்றார்.படகு மீது இலங்கைகடற்படை மோதி சேதப்படுத்தியது. ராஜ் கிரண் கடலில் மூழ்கி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின் அவரது உடல்

மதுரை:புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கோட்டைப் பட்டினம் பிருந்தா தாக்கல் செய்த மனு:எனது கணவர் ராஜ்கிரண். இவர் அக்.,18 ல்சிலருடன் கடலில் மீன் பிடிக்க படகில்சென்றார்.படகு மீது இலங்கைகடற்படை மோதி சேதப்படுத்தியது. ராஜ் கிரண் கடலில் மூழ்கி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின் அவரது உடல் மீட்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டது. கணவரை இலங்கை கடற்படை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.விசாரிக்க வேண்டும் தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: உடலை நவ.,18 ல்(நாளை)கோட்டைப்படினம் டி.எஸ்.பி.,மணமேல்குடி தாசில்தார் முன்னிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை டாக்டர் சரவணன், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் தமிழ்மணி மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

மனுதாரர் தரப்பில் ஓய்வு பெற்ற தடயவில் நிபுணர் சேவியர் செல்வ சுரேஷ் உடன் இருக்கலாம். அரசுத் தரப்பில் நவ.,24 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X