பழனிசாமி பி.ஏ.,க்கு முன்ஜாமின் மறுப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பழனிசாமி பி.ஏ.,க்கு முன்ஜாமின் மறுப்பு

Added : நவ 17, 2021
Share
சென்னை:மோசடி வழக்கில், முன்னாள் முதல்வரிடம் உதவியாளராக இருந்தவருக்கு முன்ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.சேலம் மாவட்டம் நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி; இவர், முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் உதவியாளராக இருந்தார். கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர், மணி மற்றும் செல்வகுமாருக்கு எதிராக, சேலம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில்

சென்னை:மோசடி வழக்கில், முன்னாள் முதல்வரிடம் உதவியாளராக இருந்தவருக்கு முன்ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சேலம் மாவட்டம் நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி; இவர், முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் உதவியாளராக இருந்தார். கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர், மணி மற்றும் செல்வகுமாருக்கு எதிராக, சேலம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதில், அரசு வேலை வாங்கி தருவதாக 13 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக கூறியிருந்தார்.

இதையடுத்து, இருவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மணி மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதி தமிழ்செல்வி முன், விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் வழங்க, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, முன்ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X