எல்லை பாதுகாப்பு படை அதிகார வரம்பை எதிர்த்து மேற்குவங்க சட்டசபையில் தீர்மானம்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: எல்லை பாதுகாப்பு படை போலீசாரின் அதிகார வரம்பை அதிகரித்து உத்தரவிட்ட மத்திய அரசை கண்டித்து மேற்குவங்க சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மூன்று மாநிலங்களான பஞ்சாப், குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில், எல்லை பாதுகாப்பு படை போலீசாரின் அதிகார வரம்பு, 15 கி.மீ.,யில் இருந்து 50 கி.மீ.,
 எல்லை பாதுகாப்பு படை West Bengal Assembly passes resolution against Centre's BSF jurisdiction orderஅதிகார வரம்பை எதிர்த்து மேற்குவங்க சட்டசபையில் தீர்மானம்

புதுடில்லி: எல்லை பாதுகாப்பு படை போலீசாரின் அதிகார வரம்பை அதிகரித்து உத்தரவிட்ட மத்திய அரசை கண்டித்து மேற்குவங்க சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மூன்று மாநிலங்களான பஞ்சாப், குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில், எல்லை பாதுகாப்பு படை போலீசாரின் அதிகார வரம்பு, 15 கி.மீ.,யில் இருந்து 50 கி.மீ., அதிகரித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.இதற்கு மாநில அரசுகள் கண்டனம் தெரிவித்தன.


latest tamil news



மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மேற்குவங்க அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், தீர்மானம் கொண்டு வந்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, மேற்கு வங்கத்தில், எல்லை பாதுகாப்பு படை போலீசாரின் அதிகார வரம்பை அதிகரிக்கும் விவகாரத்தில் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்த மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். அதிகார வரம்பை அதிகரித்துள்ளதன் வாயிலாக மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
17-நவ-202117:13:14 IST Report Abuse
R VENKATARAMANAN எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை அதிகரித்ததால் மம்தாவுக்கு ஏன் வலிக்குது. நாட்டின் பாதுகாப்புதான் முக்கியமே தவிர மம்தாவின் சுய விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டின் எல்லை பாதுகாப்பு மத்திய அரசு பொறுப்பு. மம்தா தீர்மானம் அதிகார மீறல். கடத்தல், ஊடுருவல் தடுக்க மத்திய அரசு உத்தரவு மாநில உரிமையில் தலையிடுதல் ஆகாது. இது அதிகார துஸ்பிரயோகம். ஏற்கனேவே அங்கு ஹிந்துக்களுக்கு எதிரா மற்றும் தனக்கு ஓட்டளிக்காத வர்களுக்கு எதிராக துன்புறுத்தல் நடந்துகொண்டிருக்கிறது. அதிகார துஷ்ப்ரயோகம் என்ற் முறையில் பார்லிமெண்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மாமதா அரசை கலைத்து இந்தியாவின் இறையாண்மையை காப்பாறலாம்
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
17-நவ-202110:13:15 IST Report Abuse
Ramalingam Shanmugam இன்னொரு ........
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
17-நவ-202108:39:40 IST Report Abuse
GMM நாட்டின் எல்லை பாதுகாப்பு மத்திய அரசு பொறுப்பு. மம்தா தீர்மானம் அதிகார மீறல். கடத்தல், ஊடுருவல் தடுக்க மத்திய அரசு உத்தரவு மாநில உரிமையில் தலையிடுதல் ஆகாது. தேர்தல் ஆணையம் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் இது போன்ற (வாக்கு வங்கி) தீர்மானம் அனைத்து தேர்ந்து எடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒப்புதல் பெற வேண்டும். அண்டை மாநிலங்களில் தடையில்லை என்று சான்று பெற வேண்டும். அதன் பின் அதிகாரிகள் கையெழுத்திட வேண்டும். அதிகார மீறலுக்கு உதவிய அதிகாரிகள் டிஸ்மிஸ்(அ) ஆட்சி டிஸ்மிஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X